January 17th, 2008

லா.சா.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தல்



“நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்” - லா.சா.ரா

1
கனவுகள், காதல், கிளர்வுகள் மற்றும் இதம்தரு மென்னுணர்வுகளாலும் தனிமையாலும் நிரம்பியிருக்கிற பதின்மவயதுகளின் நடுப்பகுதியில் லா.சா.ராவின் பிரதிகள் எனக்கு அறிமுகமாகின. தற்செயலாய்க் கைக்குக் கிட்டிய இந்தியாடுடே இலக்கிய ஆண்டுமலரில்(1994) இரண்டு கதைகள் பிடித்திருந்தன: ஒன்று வாசந்தியினுடைய நல்ல கதைகளில் ஒன்றான ‘கொலை’ மற்றது லா.சா.ராவின் வழக்கமான பாணியிலமையாத மிகவும் மனோரதியமான கதையான ‘அலைகள்’. இந்தக் கதைகளுக்குப் பின்னர்தான் நூலகத்தில் லா.சா.ராவையும், வாஸந்தியையும் தேடத் தொடங்கினேன். வாசந்தியின் ‘நான் புத்தனில்லை’ எனும் நாவல் அடுத்து வந்த வாரங்களில் என் ஆதர்ச நூலாக இருந்தது. லா.சா.ராவின் அபிதாவையும் எடுத்து வந்திருந்தேன்; ஆனாலும் அபிதாவின் மொழி ‘அலைகள்’ சிறுகதை போலன்றி விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. லா.சா.ராவுக்கு முன்பு நா.பாவின் ‘மணிபல்லவம்’, கல்கியின் புனைவுகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்து கொண்டிருந்தன. சமஸ்கிருதத்தன்மையும் ஒருவித தொன்மம் கலந்த குறியீடுகளும் விளங்காதுபோயினும் சரித்திரப்புனைவுகளை வாசிப்பது போன்ற உணர்வு இருந்தது. ‘அபிதா’வின் பூடகமான மொழிவேறு ஒரு விடுகதையின் மர்மக் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. இருண்மையான அந்த மொழிக்கும் எனக்கும் நடந்த ஒருவித போராட்டத்தில் லா.சா.ரா வெகு சீக்கிரத்தில் நான் தேடிப்படிக்கிற பெயராயிற்று.
இன்றைக்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், லா.சா.ராவின் (பௌதீக)மரணிப்பின் பின்னராக, இழப்பின் வலியென்பது உசுப்புகிற நினைவடுக்கில் ‘அபிதா’வின் மீது, அந்த மொழியின் மீது பித்துப் பிடித்துக் கிடந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நிச்சயமாய் அந்த நிலை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமூட்டுகிற ஒன்றுதான். அந்த நாட்களில் லா.சா.ராவைக் கிறக்கத்துடன் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த கட்டுடைப்புக்கருவிகளுடனான வாசிப்பு, விமர்சனப்புத்தி என்கிற எல்லாவற்றுக்கும் அப்பால் லா.சா.ராவின் மரணம் வலிதருவதாயிருக்கிறது என்பதுவே நான் பகிர விரும்புவது.

2
முதன்முதலில் நான் வாசிக்க நேர்ந்த லா.சா.ராவின் சிறுகதையான ‘அலைகள்’ மனோரதியமான சிறுகதையென்பதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் ‘அபிதா’ மிகவும் இருண்மையானது. விடுகதையின் மாயக்கவர்ச்சி நிரம்பிய அப்பிரதியை ஒரு ஒழுங்கில் வாசித்தேனில்லை. அப்படி வாசிப்பது கடினமாகவிருந்தது. மூச்சுத்திணறவைக்கிற மொழிதல்களுக்கிடையில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன், அந்த அலைதலின் சுவாரசியம் பிடித்துப் போக மூன்றுதடவைகளுக்கு மேலாக நூலகத்தில் புத்தகத்தைத் திகதி மாற்றம் செய்து என்னுடனேயே வைத்திருந்தேன். உணர்வுகளின் மிதமிஞ்சிய பெருக்கத்தில் மொழி நீர்மையானதாக மாறிப் பாய்ந்துகொண்டிருக்க அதனடியில் இழையும் சம்பவக் கோர்வைகளைக் கண்டெடுத்தல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே சாத்தியமாயிற்று.
தர்க்கங்களுக்கு அப்பால்பட்ட, புலனுணர்வுகளாய் மாறிவிடுகிற இசைத்தன்மை கொண்ட மொழி லா.சா.ராவினுடையது. நுட்பமான இசைக்கோர்வையொன்றின் கட்டமைப்பை லா.சா.ரா பிரதிகளில் காண்முடியும். 1989 சாகித்ய அக்கடமி விருது ஏற்புரையில் musical effectஐ எழுத்தில் கொண்டுவருதல் குறித்து லா.சா.ரா விரிவாகப் பேசுகிறார்.
இத்தகைய இசையுடன் ‘அபிதா’வில் இருந்த பிடித்தாட்டும் வேட்கை, வெளிப்படுத்தப்பட முடியாத தாபங்களின் பெரும் ஓலம் என்பன நடுங்க வைப்பதாய் இருந்தன. அர்த்தங்களைத் தேடுதல், தேடுதல் மேலும் தேடிக்கொண்டேயிருத்தலின் இன்பம் அக்காலங்களில் என் வாசிப்பிலிருந்த பிரதியாளர்கள் பட்டியலில் லா.சா.ராவிடம் மட்டுமே சாத்தியமாகிற்று.
லா.சா.ராவின் பிரதியுலகம் மர்மமான சங்கேதங்கள், குறியீடுகளாலானது. இவற்றால் பின்னப்படுகிற அவருடைய மொழி போதையும் லயிப்பும் தருகிற கவித்துவமிக்க ஒன்று. இந்த மொழிக்குள் வைக்கப்படும் கதையென்பது துண்டுகளாலானது(fragments). துண்டுகளாக்கப்பட்ட கதைசொல்லல் முறையில்(fragmented narration) கதைகளைக் கண்டெடுக்க முடிவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்நாட்களில் எனது குறிப்புப் புத்தகம் லா.சா.ராவின் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது. உக்கிரமான உணர்வுகளால் நான் காவிச்செல்லப்படுகிற போதெல்லாம் அந்த மூர்க்கத்தை, தகிப்பை சில சமயங்களில் உறைந்து போதலைப் பகிரக் கூடிய பிரதிகளாய் லா.சா.ராவினுடைய பிரதிகள் இருந்தன. எப்போதெல்லாம் ஒருவித metaphysical train of thought (அபௌதீகச் சிந்தனைத் தொடர்ச்சி?) மனதில் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் லா.சா.ராவின் வார்த்தைகளில் சிந்திக்கப் பழகியிருந்தேன். இப்படியான ஒரு உத்தியை மிகவும் physicalஆன எனது அந்நாளைய பிரச்சனைகளைக் கடந்து செல்கிறதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். (எனதல்லாத இன்னொருத்தரின் வார்த்தைகளில் என்னைப்பற்றிச் சிந்திப்பது குறித்த சிக்கலின் உக்கிரத்தைத் தணிக்க உதவிற்றுப் போலும்.)
லா.சா.ராவைப் புரிந்து/உணர்ந்து கொள்வதும் சரி, புரியாமல் தவிப்பதும் சரி மிகவும் இன்பமான அனுபவங்கள் தான். புரியாது/உணரமுடியாது போய்விடின் அந்த நிலமை தருகிற அந்தரிப்பு, தவிப்பு, அலைக்கழிப்பு என்பன ஒருபுறம்; புரிந்து/உணர்ந்து கொண்டால் அந்தப் புரிதலின் வலி, தன்னை உணர்தலில் ஏற்படுகிற சுயபச்சாத்தாபம் என்பன மறுபுறம்… இப்படியாக லா.சா.ராவின் பிரதி தருகிற இன்பம் விநோதமான ஒன்று.
அக்காலப்பகுதியில் பிடித்தமாயிருந்த பெண்னுடல், தாபம், காமம் பற்றிய விபரிப்புகளை லா.சா.ராவிடம்(ஓரளவுக்கு ஜானகிராமனிடத்திலும்) நான் லயிப்புடன் அனுபவித்திருக்கிறேன். ஜானகிராமனின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் யதார்த்தமானவை, உலர்ந்து மரக்கட்டையாகிவிட்ட ‘மோகமுள்’ ஜமுனாவின் உதடுகள் யதார்த்தமானவைதான் என்றாலும் பதின்மவயதின் கனவுகளை அது குலைப்பதாய்த் தான் இருந்தது. லா.சா.ராவின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் இப்படியான இடையூறுகளைத் தந்தது இல்லை. அது ஒரு fantasy. அன்றைய மனோநிலைக்கு யதார்த்தநீக்கம் செய்யப்பட்ட பெண்ணுடல் அவசியமானதுதானில்லையா? மிகவும் physicalஆன Sensualityயாக தி.ஜா இருக்க லா.சா.ரா ஆணின் fantasyகளுக்கான பெண்ணுடல்களை தனது பிரதிக்குள் வைத்திருந்தார். இதனால்தான் தமிழ் எழுத்துப்பரப்பில் ஆண்மொழியைச் (masculine language) என்பதைச் சாத்தியமாக்கிக் காட்டியவரென லா.சா.ரா குறிப்பிடப்படுவது உண்டு. (இங்கு தி.ஜாவின் விபரிப்புகளின் வலிமையை நான் குறைக்கிறேன் என்றில்லை, அவை வலிமையானவைதான் ஆனால் ஒரு பதின்ம வயது இளைஞனுக்கல்ல.)
லா.சா.ரா தனது நேர்காணலொன்றில் பின் வருமாறு கூறுகிறார்: “I live in terms of music, I speak in terms of music.” இந்த இசையின் மாபெரும் ரசிகனாய், அடிமையாய் அல்லது லா.சா.ராவின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘அந்த சௌந்தர்யத்தின் மாபெரும் உபாசகனாய்’ மாறிப்போய்விட்டிருந்தேன். “பொதுவாக ஒரு தத்துவ விசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும்” தன் எழுத்தின் உள்சரடாக ஓடிக்கொண்டிருப்பதாய் கூறுகிறார் லா.சா.ரா. அவரது பிரதிகள் குறித்த மிகச்சரியான மதிப்பீடு இதுவாய்த்தான் இருக்க முடியும்.
பதின்மங்களில் லா.சா.ரா பிரதிகளில் வேட்கையை, அவர் குறிப்பிடுகிற ஆத்மதாபத்தை வாசிக்க முடிந்ததே தவிர லா.சா.ராவின் ‘தத்துவ சாரத்தையோ’ அதற்கிருக்கக் கூடிய அரசியலையோ இனம்கண்டு வாசிக்க முடிந்தது இல்லை. ‘தொனி’ என்கிற தமிழ்ப்பதிலி இருக்கும்போது லா.சா.ரா ஏன் ‘த்வனி’ என்கிற சமஸ்கிருதச் சொல்லைக் கையாளவேண்டும் என்கிற மிகச்சிறு விடயம், திராவிட இயக்கங்கள் இத்யாதி இத்யாதி எல்லாம் அப்போது உறைக்காமல் போய்விட்டதற்கு என்ன காரணம்?

3
யாழ்.பொது நூலகம் திறக்கப்பட்டதையொட்டி லா.சா.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தனுக்கப்பால் நகர முடிந்தது. காலச்சுவடு, உயிர்மை எல்லாம் அங்குதான் முதன்முதலில் கண்டது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என வாசிக்கத் தொடங்கி கோணங்கி, பிரேம்-ரமேஷ் எனப் பலரது பிரதி உலகங்களுக்குள் மூழ்கிப்போனதில் லா.சா.ரா போன்ற பழைய ஆதர்சங்களின் மீதான ஈர்ப்புக் குறைந்து போய்விட்டிருந்தது. ஆனால் கோணங்கியின் மொழியை அவ்வளவு சீக்கிரம் உணர்ந்துகொள்ள முடிந்ததில் லா.சா.ராவின் மொழியுடனான பரிச்சயம் உதவி புரிந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
பின்னர் நிறப்பிரிகையின் பழைய இதழ்களையும், அப்பிரதிகள் சுட்டுகிற பிரதிகளையும் படித்ததில் கிடைத்த மிகவும் சுவாரஸ்யமான வாசிப்புக் கருவிகளுடன் எனது முன்னாள் ஆதர்சங்களின் பிரதிகளுக்குள் மீள நுழைந்த போது முதலில் இற்று வீழ்ந்தவர் க.நா.சு. லா.சாராவைப் பொறுத்தவரை, பின்-நவீன புரிதல்களினடியாய் அவரது ‘தத்துவ சாரத்தை’ அபாயகரமான ஒன்றாக இனம்கண்ட போதும், அவருடைய பிரதிகளின் கவர்ச்சியை, ஈர்ப்பை என்னால் மறுக்கவோ/மறைக்கவோ முடிந்தது இல்லை. லா.சா.ரா எனக்குப் பிடித்த பிரதியாளராகத் தொடர்ந்தும் இருப்பதில் சிலகாலம் பயங்கரமான குற்ற உணர்வு இருந்தது. ‘புதிய தோழர்கள்’ லா.சா.ரா பிரதிகளை விரும்புவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
லா.சா.ராவின் ‘அகம் சார்ந்த தேடல்’ என்பது இந்திய இந்துத்துவப் பெருமரபைச் சேர்ந்த ஒன்று. அது தனது பண்பாட்டு எல்லைகளை மீறுகிற முனைப்புடன் எங்குமே இருந்தது இல்லை. உண்மையில் நான் ‘அபிதா’வில் இருந்த உணர்ச்சிக்குவிப்பு, மூர்க்கமிக்க அலைக்கழிக்கும் விபரிப்புகளில் ஊறிப்போய், ‘இறுதிவரை அம்பி, அபிதாவின் விரல்நுனியைக் கூடத் தீண்டாமல் இருந்தான்’ என்பதற்கு இருக்கும் மரபார்ந்த அற உணர்ச்சிசார் பொறுப்புணர்வைக் கவனிக்கவில்லை. அபிதா நாவலின் முன்னுரையின் ‘அபிதா’ என்பதை ‘உண்ணாமுலையம்மன்’ என்கிற அர்த்தம் வரும்படிக்கு விளக்கியிருப்பார் லா.சா.ரா. வேட்கை, காமம் பற்றிய விபரிப்புகள் கூட எல்லை மீறாமல் ஒருவித புனிதப்படுத்துகையுடன் இடப்படுத்தப்பட்டிருப்பதையும், அதன் மூலம் கிரேக்கக் கதார்ஸிஸ் ஒன்று நிகழ்த்தப்பட்டு மனதை நிர்மலமாக்குகிற ஆன்மீகநோக்கமே இயங்குகிறது என்பதையும் அதிர்ச்சியுடன் உணர நேர்ந்தது.
தனது பிரதியாக்கமுறை பற்றி எழுதுகிற லா.சா.ரா Mysticismஉடன் தன்னை இனம்காட்டிக்கொள்ள விரும்புவதைக் காணலாம். லா.சா.ராவின் mysticismஉம் பின்நவீனம் ஆதரிக்கிற சிறுமரபுசார் தொன்மங்களின் mythopoetic textsஉம் வேறுவேறு. லா.சா.ராவின் Mysticism ஆன்மீகத்தன்மையான சங்கேதங்கள், புனிதக் குறியீடுகள், மர்மம், ஆன்மவிசாரத்தைச் சாத்தியமாக்குகிற கவிதையியல், கதார்ஸிஸைக் கொணரும் அழகியல் விபரிப்பு என்பதையே தனது கூறுகளாய்க் கொண்டியங்குகிறது. இந்தவகை எழுத்து முறையை லா.சா.ரா இந்துத்துவக் கூறுகளுடன் இணைக்கும்போது அவரது பிரதி ஓர் இந்துத்துவ அரசியல் பிரதியாக மாறி விடுகிறது.
லா.சா.ராவின் பிரதியாக்க நுட்பத்தை ‘நனவோடை உத்தி’(Stream of consciousness) எனக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இந்த உத்திக்காக அறியப்படுகிற ஜேம்ஸ் ஜொய்ஸையும் லா.சா.ராவையும் ஒருசேரப் படிப்பவர்கள் லா.சா.ராவின் பிரதிகளில் இயங்குகிற ‘புனித ஒழுங்கை’ உணர முடியும்.
ஜேம்ஸ் ஜொய்ஸ் குறித்து லா.சா.ராவிடம் கேட்கப்பட்ட போது யுலிஸிஸ் நாவல் ‘அப்பட்டம், வக்கிரம், குப்பை, ஆபாசம், சாக்கடை கலந்தது’ எனக் கூறி நிராகரிக்கிறார். அந்த நேர்காணலிலேயே தனது பிரதிகளில் கையாளுகிற நனவோடை உத்தியை ஜேம்ஸ் ஜொய்ஸிடமிருந்து வேறுபிரித்து அணுகும்படியும் லா.சா.ரா கேட்டுக்கொள்கிறார்: “நீங்களெல்லாம் எண்ணுகிற நனவோடை அல்ல அது. எண்ணத்திலேயே பரிசுத்தமாக அதை நான் கையாண்டு இருக்கிறேன். குதிரை பசும்புல்லைத்தான் தின்னும், வைக்கோலைத் தின்னாது. அது போலப் பசும்புல்லை மேயவிட்டிருப்பேன்.”
இக்கூற்றிலிருந்து லா.சா.ராவின் பிரதிகளில் வைக்கோலைத் தின்னுகிற கழுதை, மலத்தை உண்கிற பன்றி அன்னபிற விலங்குகளுக்கு வழங்கப்படுகிற இடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். தலித்துக்கள், விளிம்புநிலை மனிதர்கள், மனப்பிறழ்வுற்றோர், வன்முறையாளர்கள் எல்லாம் லா.சா.ராவின் நனவோடையின் புனித எல்லைகளுக்கப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். லா.சா.ரா கூறுவதுபோல அங்கு பசும்புற்கள் தான் உண்டு, கருகிய புற்களின் கதியென்ன? இதனடியாக லா.சா.ரா தனது பிரதிகளை, அவற்றின் அழகியலை எந்த வர்க்கத்தின்/சாதியின் சொல்லாடல்களுடன் இணைக்கிறார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
[இடதுசாரி விமர்சகர்களின் கண்டனத்துக்குள்ளான சௌந்தர்ய உபாசகம்Xவியட்னாம் நிலமைகள் சிக்கலில் லா.சா.ராவின் சாய்வே எனக்கு இப்போதும், அதில் அவர் ஒரு நேர்மையான மனிதராய் நமக்குத் தெரிகிறார். அன்றாடம் கொலை நடக்கிற இந்தச்சூழலிலும் எமது அதிகாலைத் தேநீரை ரசித்துக் குடிக்க முடிகிறதே அது போலத்தான்.]
லா.சா.ராவின் மறைவையொட்டி நான்காவது பரிமாணம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்(Nov.03 ‘ஐ’ அலைவரிசை) உரையாடலில் கலந்துகொண்ட எஸ்.எல்.எம் ஹனீபாவின் கருத்துக்களைக் கேட்ட போது லா.சா.ரா பிரதிகளின் மரபுவாத/பழமைவாதக் கூறுகளை மேலும் தீவிரமாய் உணர முடிந்தது. எஸ்.எல்.எம்.ஹனீபா லா.சா.ராவின் மொழி, பிரதிநுணுக்கங்கள் பற்றிக் கவனம் குவிக்கவேயில்லை; மாறாகா லா.சா.ராவிடமிருந்து இக்காலத்திய இளைஞரொருவர் ‘கற்றுக்கொள்ள’ வேண்டிய விடயங்களைப் பட்டியலிடுகிற காரியத்தையே அவர் (மிகவும் உவப்புடன்) செய்தார். லா.சா.ராவின் பிரதிகள் வலியுறுத்துகிற கூட்டுக்குடும்ப மரபுகள், அவர்களின் பண்பாட்டு ஒழுங்கமைப்பு, வாழ்தல் நோக்கங்கள் ஆகியவற்றின் உயரிய தன்மை என்பன சிலாகிக்கப்படுகையில் குறித்த குடும்ப நிறுவனத்திற்குள் சிக்குண்டு மூச்சுவிடவே திணறிக்கொண்டிருக்கிற ஒரு சிறு பொடியனாய்/பெட்டையாய் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களிடம் லா.சா.ரா பற்றி உருவாக்கியளிக்கப்படுகிற சித்திரம் எதுவாயிருக்கக் கூடும்?
லா.சா.ராவை இவற்றுக்காக நிராகரித்துவிடுதல் சாத்தியமில்லை. அவரது பிரதிகளில் மிக இளம் தலைமுறையினர் வாசிக்க வேண்டிய நிறைய வேறு விடயங்கள் உண்டு. எஸ்.எல்.எம் கூறிய விடயங்களை/ அல்லது லா.சா.ராவின் பேட்டிகள் வலியுறுத்துகிற விடயங்களைத் தான் நாம் அப்பிரதிகளில் வாசிக்க வேண்டுமென்பது இல்லை.
இன்றைக்கு லா.சா.ராவை நான் வாசிக்கும்போது முன்புபோல் அவரது மொழியின் போதையேற்றலில் மயங்கிக் கிடப்பதில்லை. அவரது பிரதியின் சொல்லப்படாத பக்கங்களைச் சேர்த்து வாசிக்க முடிகிறது. இதுவும் கூட இன்பம் தருவதுதான். மொழிபுகளின் லாவகமான நெளிவு சுளிவுகளில் வழுக்கியபடி லா.சா.ராவின் அரசியலை வாசிப்பது இன்னொருவித கிறக்கத்தைத் தருகிறது. இதுகூட அவரது மொழியின் அசாத்தியமான தன்மையால்தான் என நினைக்கிறேன். ஏனெனில் க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களிடத்து கட்டுடைப்பு வினையென்பது அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. ஏனெனில் அங்கு மொழிவிளையாட்டுக்கு, அர்த்தங்களை ஊகித்துச் செல்வதற்கு இடமேயில்லை. இங்கு அர்த்தங்களைச் சந்தேகப்படுத்தி, வேறுவேறு சூழமைவுகளில் இடப்படுத்தியணுகிற ஒரு தன்மை இருக்கிறது. இந்த நிலமையைத்தான் ‘நல்ல இலக்கியத்துக்கான’ தகுதியாக ரோலன் பார்த் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த மொழியை நாம் லா.சா.ராவிடத்து இன்னும் ஆழமாய் புரிந்து வாசிக்க முயல வேண்டும். அதே போல இந்த ஆண்மொழி முக்கியமானது. தி.ஜானகிராமன், நகுலன்(சுசீலா), லா.சா.ரா(அபிதா, ஏகா, ஜனனி) போன்றவர்களிடம் masculine language என்பது இயங்குகிற விதம், அதில் ‘பெண்மை’/”பெண்’ ஆகியவை எங்கனம் மற்றும் எவ்விதத்தில் இடப்படுத்தவும் இடமழிக்கவும் பட்டிருக்கின்றன என்பதை வாசிப்புச் செய்ய வேண்டும். இப்படியாக லா.சா.ராவை முன்வைத்து உரையாட ஏராளம் விடயங்கள் உண்டு; அவரது பிரதிகளுக்கும் கர்நாடக சங்க்கிதக் கட்டுமானத்துக்கும் இடையேயிருக்கிற இசைவிணைவுகள், அவரது பிரதிகளில் கையாளப்பட்ட நனவோடை உத்தியில் Continuity of conscience (பிரக்ஞையின் தொடர்ச்சி) மற்றும் Conscience of continuity (தொடர்ச்சி குறித்த பிரக்ஞை) எனுமிரண்டும் ஒன்றையொன்று குறுக்கீடு செய்கிற விதம், இப்படியான குறுக்கீட்டால் அமைக்கப்படுகிற அவரது narrative installments, இந்தக் கதைசொல்லல் துண்டுபடுத்தப்படுகிற விதம், இந்தத் துண்டுகள் தமக்கிடையிலாகப் பேணிக்கொள்கிற ஒருவித அதீத ஒழுங்கு(meta-structure of fragmented narratives)… இவை பற்றியெல்லாம் லா.சா.ரா பிரதிகளை முன்வைத்து உரையாட வேண்டும்; குறிப்பாகப் பெண்ணியர்கள் மற்றும் பின்நவீன பிரதியாளர்கள். எமது முன்னைய தலைமுறை லா.சா.ராவை நிராகரித்தது(கைலாசபதி), விளங்கவில்லை என்று அப்பால் வைத்தது. நாம் லா.சா.ராவை மீள வாசிக்க வேண்டும். மேலும் மேலும் சிக்கலடைந்து செல்கிற பிரதிகளை விளங்கிக் கொள்ள இதுபோன்ற மீள்வாசிப்புகள் அவசியமானவை. லா.சா.ராவின் பிரதிகள் பற்றிய உரையாடல் தமிழில் உரிய காலகட்டத்தில் நடந்திருந்தால் இன்றைக்குக் கோணங்கியை, பிரேம்-ரமேஷை விளங்கிக் கொள்வதில் நாம் இவ்வளவுக்குப் பின்நிற்கத் தேவையில்லை. மாறாக இன்னும் தீவிரமாக இவர்களது பிரதிகளை வாசிப்புச் செய்வதற்கான தகமைகளை பெற்றுக்கொண்டிருந்திருப்போம்.
லா.சா.ராவை வாசிப்பதென்பது அவ்வளவு கடினமான, சுமையான விடயமில்லை. அந்த அனுபவம் அலாதியானது. அதிலும் லா.சா.ராவும் அவரது பிரதிகளை வியாக்கியானப்படுத்துகிற பழைய தலைமுறையினரும் சொல்கிற மாதிரித்தான் லா.சா.ராவை நாமும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை. தலைமுறைகள், கோட்பாடுகள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் கடந்து, அவற்றை மீறி லா.சா.ராவின் மொழிக்கு இருக்கிற அந்த அரூபமான, மௌனமான இசை என்னை மிகவும் வசப்படுத்தி அலைக்கழித்தது. இப்போது அரசியல் புரிந்திருக்கிற நிலையிலும் அப்பிரதிகளை வாசிப்பது இன்பம்தருகிற ஒன்றாகவே இருக்கிறது. அந்த இசை ஓய்ந்து போய்விடவில்லை.
நகுலன் இறந்த போது ‘நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ எனும் வாக்கியத்தை கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ தொகுப்பிலிருந்து எடுத்து முகப்பில் பிரசுரித்திருந்தது உயிர்மை இதழ். லா.சா.ரா இறந்துபோய்விட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்த ஒலிநாடா வாக்கியம்தான் உடனடியாய் நினைவில் வந்தது. இதை எழுதுவதற்காய் லா.சா.ராவின் பிரதிகள் சிலதை மீள வாசிக்கும்போது அப்போதெல்லாம் கேட்ட, நான் உபாசித்த, ரசிகனாயிருந்த அதே இசை கேட்கிறதா எனக் கவனித்தேன்: மௌனம், மௌனம் மேலும் குளிர்கிற மௌனம். எதிர் இருக்கையில் இருந்து உரையாடிக்கொண்டும் இசைத்துக்கொண்டும் இருந்த, பல காலம் பழகிய ஒருத்தர் எழுந்து போய்விட்டிருக்கிறார். அந்த இருக்கை வெறுமையாகவே இருக்கிறது, அப்படியான ஒரு வெறுமையை பிரதிகளை-குறிப்பாக அபிதாவை வாசிக்கும் போது மிகவும் பௌதீகமாகவே உணரக்கூடியதாய் இருந்தது. லா.சா.ரா என்கிற மனிதருடன் இவ்வளவு காலமும் உரையாடிக்கொண்டா இருந்திருக்கிறேன்?! அப்படியானால் ‘பிரதியாளரின் மரணம்’?? சொல்லத் தெரியவில்லை.

***



June 9th, 2007

P O L I T Y



இலங்கையின் சமூகங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள்இ மானுடவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக விஞ்ஞானிகளின் கூட்டுப் பங்களிப்பில் சமூக விஞ்ஞானிகள் சங்கம் வெளியிடுகிற காத்திரமான அரசியல்-சமூகவியல் ஏடு Polity. குமாரி ஜெயவர்த்தன, ஜெயதேவ உயங்கொட ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு October-December 2006 இதழ் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இலங்கைக்கு மீள் நிர்மாணம் என்ற போர்வையில் வழங்கப் படும் நிதியுதவிகளின் பின்னால் தொழிற்படுகிற அரசியல், அதன் தன்மைகள் தொடர்பில் சிறந்த ஆய்வொன்றை இலங்கையின் முன்னணி மானுடவியலாளரான தாரிணி ராஜசிங்கம் சேனநாயக்க எழுதியிருக்கிறார். The political Economy of Aid, Conflict, And Peace building in Sri Lanka என தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வு பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை முன்வைக்கிறது. வெளிநாட்டு உதவிகள் தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் செயலையே செய்கின்றன என்பதை தகவல்களுடன் ஆதாரபூர்வமாக நிறுவிக் காட்டுகிறார் தாரிணி ராஜசிங்கம். சுனாமியின் போது வெளிநாட்டு உதவிகளை மறுத்துச் செயற்பட்ட இந்தியாஇ தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுடன் உதவிகளைப் பெற்று செயற்பட்ட இலங்கை மீள்நிர்மாணத்திட்டங்களின் அடைவை ஒப்பிட்டு புள்ளிவிவரங்களின் துணையுடன் தாரிணி அலசுகையில் இலங்கை அலுவலர் ஆட்சியின் சீரழிவுகளும் NGO/INGOு குழறுபடிகளும் புலனாகின்றன.

Yolanda Foster மட்டக்களப்பு நிலவரங்களை தன் அனுபவங்கள் வாயிலாக A journey towards Batticoala எனும் கட்டுரையாக எழுதியிருக்கிறார். தொழிலாளர் சர்வதேசியம்இ தொழிற்சங்க அரசியல்இ இடதுசாரி முனைப்புக்களுக்குப் புத்துயிரளிக்க முயலும் ‘Revitalizing Trade Unions’ கட்டுரையை ஜயங்க பியன்வல எழுதியிருக்கிறார். சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் தீவிரமான தன்மைகளை அவாவும் ரோஹினி ஹென்ஸ்மனின் ‘Globalization, Militarism and Labor’ கட்டுரை உலகமயமாதலின் பின்னணியில் தொழிலாளர் நலன்கள் பாதிக்கப் படுகிற விதங்களையும் சொல்கிறது. இந்தக் கட்டுரைகள் இலங்கையின் இடதுசாரிகளுக்குப் பாடமாக வைக்கப் பட வேண்டியவை. காலனியாதிக்கத்துக்கு முந்தைய வரலாறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் படி சிங்கள மேலாதிக்க வாதிகளுக்கு அறிவுரை சொல்லும் ரோஷன் டி சில்வாவின் The Myth of the Centralized Polity in Sri Lanka கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

இவை தவிர ரவிராஜ்இ கேதீஷ் லோகநாதன்இ அட்ரியன் விஜெமன்னேஇ ஒஸ்மன்ட் ஜெயரட்னெ ஆகியோருக்கான அஞ்சலிக் குறிப்புகள், கனேடியத் தமிழரான இந்திரன் அமிர்தநாயகத்தின் கவிதை என்பனவும் ஆவணங்கள் பகுதியில் ‘Fracticidal Political violence among Tamil speaking people’ என்ற தலைப்பில் மூவினங்களைச் சேர்ந்த அறிவுப்புலத்தினர் கையொப்பமிட்ட அறிக்கை ஒன்றும் உள்ளது.

ரோஷன் டி சில்வா எழுதிய THE MYTH OF CENTRALISED POLITY IN SRILANKA ு கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள்.

//At a recent seminar at the BMICH, H.L.De silva, Sri Lanka’s leading constitutional lawyer, opined that a “federal solution to end the ethnic conflict is like a snake a drowning man clutches onto in desperation to stay afloat.” For polemical measure he added “federalism is the beguiling serpent which by its fatal sting will bring an end to this precious republic.” However the Sri Lankan Republic is in existential tatters, riven asunder by one of most belligerent forms of ethno-religious nationalism that south Asia has witnessed. I’m not referring to the LTTE, but to the dominant form of nationalism in Sri Lanka’s last 100 years, Sinhalese Buddhist nationalism, the dominant narrative that has set the terms of debate about the nature of the post-colonial Ceylonese (Sri Lankan) state.//

//Only at Brief moments in her pre-European past has Sri Lanka ever exhibited centralizing dynamics. The degree of centralization was intimately connected to the administration of a classical hydraulic civilization. In Anuradhapura period the maintenance of the irrigation system was delegated to various farming communities who had a financial interest in their maintenance. Even during the South Indian incursions both farming communities and monasteries usually maintained the irrigation system. Ironically the centralization of administration under both Vijayabahu and ParakramabahuI may have led to a loss of local autonomy. As C.R de Silva has noted the chaos in the rajarata in the early 13th century may have sparked a migration of those skilled in irrigation management. This, combined with the decline of a more centralized administrative system, would have had an adverse effect on the ability to maintain the lifeblood of the agricultural economy. In effect the brief experiment with centralization led to the denuding of local expertise.//
//In the late 15th century rulers of Kotte succeeded in limiting the power of Jaffna kingdom to the peninsula in the north, but the authority of Kotte was limited to the west and southwest of the island. In this it was also limited by the power of regional chiefs. The consequence of this was a decentralized form of rule which itself was emblematic of the decline of central power registered by the slow collapse of Polannaruwa. Centralization was thus not the norm in Ceylon’s pre-colonial past. //

//The reforms recommended by the Colebrooke-Cameroon Commission of 1829 resulted on the one hand in the generation of a centralized Ceylonese state, which served the interests of European and local mercantile capital. It cannot be legitimated by recourse to the Pali chronicles. British rule was also marked by the introduction of new modalities of power, which were to have a significant impact on the way in which the pre-colonial was imagined in the lexicon of Sinhala Nationalism. //

//There is enough archaeological and textual evidences to indicate that both Sri Lanka’s and mainland South Asia’s pre-colonial states were essentially as Stanley J.Thambiah asserts, decentralized galactic polities.//
//There is indirect evidence from the Pali Vinaya, which suggests that the vast Ashokan empire far from been a centralized monarchy was more likely to have been a galactic entity with lesser political replicas circulating the central domain.//

தொடர்புகளுக்கு:
POLITY
No.12, Sulaiman Terrace
Colombo 5, Sri Lanka

Telephone: 2504623
E-Mail: ssa@eureka.lk
Web : www.ssalanka.org



June 9th, 2007

எசமானின் வருகையும் என் உள்ளாடையை உலர்த்துதலும்…



(நடப்பியல் புனைவு நாட்குறிப்பு - றிச்சார்ட் பௌச்சரின் வருகையையொட்டி)


-சனன்

sanan_may_2007.jpg

இதை எழுதத் தொடங்குகையில் தான்இ நேற்றைய தினம் அழுக்குப்பண்ணிய என் ஜட்டி உலரத் தொடங்குகிறது..

***

எசமான் வருகிறார்…
எசமான்களுக்கென வரலாறுகள் எப்போதும் உண்டு!
அவர்கள் நிமிர்ந்து நின்று கைலாகு தருகிறார்கள். புன்னகையுடன்.
நான் அவர்கள் முன் மௌனமாய்த் தலை குனிந்திருக்கும் உயிரி.
குருதியுறைந்த என் நகரத்தின் வெய்யில் பிடித்த தெருக்களில் அலைந்து திரிபவன் நான்.
அச்சத்துடன் - வரலாற்றின் சுற்றுப்பாதைகள் நெடுகிலும்…….
ஜதெருவிலே செல்பவர்களுக்கென்று வரலாறேதுமுண்டா?ஸ
எசமானின் வருகைக்காக திறக்கப்பட்ட என் நகரதின் பிரதான வீதியில்
வழக்கமான குருதியில்லை!
சிப்பாய்கள் என்னைப் பார்த்தும் கூட மென்னகை செய்தார்கள்.

***

இந்தப் பாதை பூட்டு….
வாகனத்தொடரணி எனது பாதையில் எனை மறித்துச் செல்கிறது.
NO ENTRY
பாதைகள் மாறி மாறி… அலைந்து அலைந்து
நூலகத்தை அடைந்தேன்.
ஜநூலகங்களுக்கான வழிகள்இ எப்போதும் - வரலாறு முழுவதும் - இப்படியாகத்தான்இ இப்படியாகவேதான் இருந்தனவா?ஸ
வரும் வழிகளில்:
வீதியெங்கும் அன்னையர்கள்
எசமானுக்கெனஇ
தோட்டை அடகுவைத்துஇ ஆங்கிலத்தில் மனு தயாரித்து
அவர்கள் நின்றார்கள்
வெய்யிலில்.
தமக்கு வழங்கப் பட்ட ஒரு கோப்பை இருளை0 விழுங்கியபடி
அவர்கள் நின்றுகொண்டேயிருந்தார்கள்…
ஜவரலாறு முழுவதிலும் அவர்கள் செய்து வந்ததை இப்போதும் செய்கிறார்கள்ஸ
சைக்கிளை உழக்கி கண்களை இறுக மூடி அவர்களைஃஅவர்களது கண்ணீரைக் கடந்தேன்.
ஜநூல் அகங்களுக்குள் செல்பவர்கள் இப்படியாகத்தான் அனைத்தையும் கடக்கிறார்களா?ஸ

***

ஜசெவ்விரத்தம் பூக்கள் வைக்கப் பட்ட வெள்ளையடிக்கப் பட்ட சரஸ்வதி சிலையில் உட்கார்ந்திருந்த காகங்களை இப்போது கூட நான் காணவில்லைஸ
ஜகாகங்களை நாங்கள் 1990இல் துரத்தினோம்ஸ
எசமான்கள் காகங்களை அழைத்து வருவதில்லை.

நூலக வாசலில் சிப்பாய் வழிமறித்தான்.
ஜஅவன் ஆண்மையாய் இருந்தான் - எல்லா தேசத்து சிப்பாய்களையும் போலவேஸ
அவன் புன்னகைத்தான்…
ஜபுன்னகைக்கும் சிப்பாய்களின் கதையை சிங்களக் கிராமங்களில் கேளுங்கள்ஸ
அடையாள அட்டையை வினாவினான்…
அவன் எனதுடலெங்கும் தடவினான்
எனது பிறப்புறுப்பைத் தீண்டாது செல்லும் அவன் கண்களைக் கண்டேன் - பயந்திருந்தான்
அவன் மேலுதட்டில் வியர்வை அரும்பியது
-சிறுவன்-வெறும் சிறுவன்
மீளவும் அவன் புன்னகைக்கையில்
அவனது தாய் போலுணர்ந்தேன்.

***

அவனுக்காக கழற்றிய தொப்பியை மீளவும் அணிந்தேன்.
ஜதொப்பியுள் எழுதப்பட்டிருந்த வாக்கியம் : One Size Fits All. made in Sri Lanka]
அவனுக்காக நிறுத்திய எனது சைக்கிளை மீளவும் உருட்டினேன்.
ஜநாம் எல்லாவற்றையுமே மீளவும் தொடங்கவேண்டியிருப்பதாய் யாரோ சொன்னார்கள் - இதுதானா அது?ஸ

நான் ஒரு போதும் ஒளிர்ந்து பார்த்திராத நூலகத்தின் மின்குமிழ்கள்
இன்றைய பகலில் ஒளிர்ந்தன
பிரகாசமாக - மிகவும் பிரகாசமாகஇ எசமானின் பற்களைப் போலவே…
Air Freshener வாசனையில் நூலகம் கமகமத்தது.
ஜரெக்கிட் பென்கிஸர் - Haze… feel NY in your room..]

எசமான் வருகிறார்.
ஜநூலக விளக்குகள் பிரகாசிக்கின்றனஸ
எசமான் வருகிறார்.
ஜஅசையாமலிருந்த மின்விசிறிகள் சுழல்கின்றனஸ
வாகனங்களை நிறுத்துமிடத்தில்ஃலும் புன்னகைக்கும் சிப்பாய்கள்.
நூலகத்தின் இருளகற்றப்பட்ட வராந்தாக்களெங்கும் சிப்பாய்கள்.
புன்னகைக்கும் சிப்பாய்கள் - இன்றைக்கு மட்டுமேயாய்…
ஜபுன்னகைக்கப் பழக்கியது யார் - சிங்கள நண்பனே?ஸ

***

நான் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஜஉள்ளூர்த் தமிழ்ப் பத்திரிகைகள் மூன்று தவிர அரசாங்கப் பத்திரிகைகள் + ஆங்கிலஇசிங்கள் ஏடுகள் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளனஸ
COLOMBO CITY WILL BE PLUNGED INTO DARKNESS!!
COLOMBO CITY WILL BE PLUNGED INTO DARKNESS!!
ஜஎசமானின் வருகையிலாவிடில்ஸ நூலகத்தின் மங்கிய இருளில்தானே
ஒளிமிகுந்த இச்செய்தியை
நான் வாசிக்க நேர்ந்திருக்கும்?
ஒளிமிகுந்த செய்தியா?
ஒளிமிகுந்த செய்தியா?
ஜகால்நூற்றாண்டுத்துயரம் நண்பரே… கால் நூற்றாண்டுத்துயரம்ஸ
President Mahinda Rajapakse’s shawl, worth Rs.5,900 is really a trend-setter. Like Condoleeza Rice’s Sleeveless top, Mahinda Rajapakse’s Shawl too had a great following. …….Partygoers were asked to wear a shawl during this vesak in order to create a ‘common identity’ for them. This hearty appreciated dress code is a unique creation of Barbara Sansoni, Sri Lanka’s leading fashion designer.
மேசையில் தட்டினார்கள்.
அது நான் பிறந்ததிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் சப்பாத்துக் கால்களின் உதைப்பொலியைப் போன்றது.
‘அவர் வரும் போது எழுந்து நில்’
ஜஎனக்கு மூத்திரம் வந்தது | வந்துகொண்டிருக்கிறது | வரும்ஸ
கழிப்பறை நோக்கிய என் பயணம் ஆரம்பிக்கிறது.
ஜதெருவில் செல்பவர்கள் காலம் முழுதும் கழிப்பறை தேடித்தானே அலைகிறார்கள்?ஸ
ஜபாதசாரிகள் தெரு முழுதும் இருளைப் பெய்தபடிதானே நகர்கிறார்கள்?ஸ
ஜஅமெரிக்க வீதிகளில் இருளைக்கண்டதுண்டா?ஸ

***

நான் பெய்யும் பொழுதில் நினைத்தவை:
தெருவில் குருதி பிரள நடப்பவர்கள்
US aid உதவியில் ஆங்கிலம் கற்பதில்லை.
US aid குருதியிலிருந்து வெளியேறும்
அமெரிக்கக் கனவில்00 உங்களை ஆழ்த்துகிறது.
அக்கனவு தெருக்களில் நடக்கும் போதும்
உங்களைப் போர்த்தியிருக்கும்…
அவர்களில் குருதிஃகண்ணீர் + இதர உடல்திரவங்கள்
பிரள்வதற்கான சாத்தியங்கள் இல்லை
FA Rol Onஉம் வெள்ளை உடல்களும் தவிர வேறேதும் பிரள்தல் சாத்தியம் தானா?ஸ
அட முட்டாளே - அந்தத் தாய்மார்கள் + பிள்ளைகள் + உறவுகள்
எல்லாம் கதறும் மொழி ஆங்கிலமா?
DOWN WITH AMERICA ு என எழுதி தூக்கிப் பிடிக்கலாமா?
ஜநான் பெய்தேன்.. பெய்தேன் பெய்து கொண்டே இருந்தேன் - அமெரிக்க அரசனைப் போலஸ

***

அவன் அழகானவனாய் இருந்தான் - அது போதுமானது.
ரூ
அவன் சிங்களவன்ஃசோனகன்ஃபறங்கிஃஏதோ ஒன்று… போகட்டும்.
கழிப்பறைக்குச் செல்லும் இருளகற்றப்படாத நடைபாதையில் துப்பாக்கியால் மறித்து எசமானுக்காய் உடல் தடவிய அவனது கண்கள் மின்னின - பூனைக் குட்டியின் கண்களைப் போல. அவனை மெல்லிய இருளில் தடவ அனுமதித்த போது நான் புன்னகைத்தேனா? ஜஞாபகமில்லைஃஇருக்கலாம்ஃதெரியாதுஃசொல்ல விரும்பவில்லைஸ
சித்திரை மழையைப் போலவும் நான் அபத்தமாக கருக்கட்டினேனா?
எச்சரிக்கையுடன் உடல் தடவும் அவனது கை மேடிட்டிருக்கும் என் டெனிம் {American Levi} மீது படிந்ததும் தயங்கி நகைச்சுவையாய் முணுமுணுக்கஇ நான் புன்னகைத்தேனா?
அந்த ஒப்பந்தத்தின் பேயர் என்ன?
அவன் தனது பிடியை இறுக்க சுவரோடு அழுந்தி………..
இதை எங்கு கைச்சாத்திட்டோம்?
யாராவது எசமானர்கள் எங்களுக்கிடையில் இருந்தார்களா??

கோடைகாலப் பணி அலுப்பூட்டுவதாக களைப்புடன் சொன்னபடி தனக்கு வழங்கப் பட்ட உள்ளாடை களைந்தான்.
நான் அமெரிக்க லெவியைத் திறந்து விடுதலையானேன்.
நானும் அவனும் இணைகையில் - இருட்டில்தானென்றாலும் - உறுத்தியது என் அமெரிக்க லெவி மட்டுமே…
அமெரிக்க ஆணுறையொன்றுக்கானஃலூப்ரிக்கன்ற்றுக்கான அவசியம் இருக்கவேயில்லை.

நான் அவனை ஈரமாக முத்தமிடுகையில் அவனது அவனுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தூரத்தில் - தேவையற்றுக் கிடந்தது.
தனக்கு வழங்கப் பட்ட உள்ளாடையை மீண்டும் இழுத்து மூடியபோது;
அமெரிக்க லெவியை மீளவும் அணிந்த போது;
One Size Fits all : made in Sri Lanka தொப்பியை அணிந்த போது;
அவன் மறந்துபோயிருந்த துப்பாக்கியை மீளவும் எடுத்தான்.
எசமானின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
எசமானால் வழங்கப் பட்ட அதை மீளவும் எடுக்கும் படியாயிற்று;
எசமான்களுக்காகஇ
எசமான்களுக்காக மாத்திரம்.

***

அவனதும் எனதும் அடையாளங்கள் என்ன?
அவனதும் எனதும் மனதில் இன்றைய சாகசத்தின் ஈரம் என்றைக்குமாய் காய்ந்து போகாது தானே?
-அவன் ஒரு தமிழனின் கறையுடன்
-நான் ‘இனம்’ தெரியாதவனின் கறையுடன்
அப்படியே மறந்தாலும் கூட
நாளை காலை வரை ஒருவருக்குள் மற்றவர் இருந்தபடியே தானே? து

***

எசமானுக்காய் ஒளியூட்டப்பட்டஇ வாசனையளிக்கப் பட்ட நடைபாதையை அடையும்வரை நாங்கள் இணைந்து நடந்தோம்.
எசமானுக்காய் அலங்கரிக்கப் பட்ட நடைபாதைகளில்இ நாமிருவரும் வேறு வேறு திசைகளில் பிரிந்தோம் - அறிமுகமற்றவர்களைப் போன்ற பாவனையுடன் பிரிந்தோம்…
எசமானுக்கான வழிகளில் நாங்கள் பிரிகையில்;
அவனது முகத்தில்
பயம் + அச்சம் + கடூரம்
அவன் சிங்கள சிப்பாய் ஆகினன்! ஆக்கப் பட்டான்.
எனது முகத்தில்
அச்சம் + சோர்வு + அலுப்பு + துயரம்
நான் தமிழன் ஆகினேன்! ஆக்கப்பட்டேன்.
எசமானுக்கான பாதைகளில் எங்கள் அடையாளங்கள் இருந்தே ஆகின…
எசமான்கள் அடையாளங்களை வழங்குகிறார்கள்.
சிப்பாய்களைக் கடந்து கடந்து…. எசமானின் கடைக்கண் வீச்சிற்காய் புத்தகங்கள் வைத்திருக்கும் பகுதிக்கு வந்தேன்.
தூசு தட்டி வைத்திருந்தார்கள் - இதுவரை காலத் தேடலில் நூலகத்தின் அடுக்கொன்றிலும் நான் காணாத புத்தகங்களை.
‘தம்பி தொப்பியைக் கழட்டும்’
‘தலையை ஒழுங்கா இழும் - வாற நேரமாச்சு’
‘ரீ-சேர்ட்டை உள்ளுக்கு விடும்’

நான் அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்தேன்.
எனதல்லாத மொழியில் என்னைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்.
State of World Children: Excluded and Invisible.
Impact of war on children: A report by Gracha Machel
Sri Lanka- A bitter harvest: Minority Rights Group
Paradise Poisoned.
அமெரிக்க எஜமானனுக்காய் புத்தகங்கள் விரித்து வைக்கப் பட்டிருந்தன.
IELTS guides.
Learning English
Essential English grammar
Intermediate grammar exercises.
எதுவும் விளங்காத அந்தப் புத்தகங்களை முகர்ந்து பார்த்தேன் - அடித்தது அமெரிக்க வாசனை.

***

காய்ந்து கொண்டிருக்கும் என் ஜட்டியில் இருந்து மெல்ல அகலும் சுதேசிய ஈரம்.

_________________
0 - கறுப்புத் தேநீர். உங்களுக்கு வழங்குவது US Aid
00 – Green Card American Visa Lottery

Thursday, May 10, 2007 10.20PM


FireStats iconPowered by FireStats