March 27th, 2007
ராஜனி..

………..
………….
நீ விழுந்த போது
சூரியனின் கடைசிக் கிரணங்கள்
சுவரில் விழுத்திய
உன் நிழல்
கைகளை வீசி மேலே ஓங்கிற்று
முடிவிலி வரை…
(நன்றி - சேரன்)
குருதி தோய்ந்த எழுத்தின் நினைவுகளுடன் ராஜனி திரணகமவிற்கு…
-முரண்வெளி-

முடிவிலி வரை…
குருதி தோய்ந்த எழுத்தின் நினைவுகளுடன் ராஜனி திரணகமவிற்கு…
-முரண்வெளி-
now on a loudy loudspeaker
Deep is the abyss, Son,
I see the weak bridge sway
But it’s not for us, son,
To choose the way.
The way I know
Is the one you must tread
And all you will eat
Is my bit of bread.
Of every four pieces
You shall have three.
Would that I knew
How big they will be!*from, Bertolt Brecht (The caucasian Chalk Circle)
1 - now on a loudy loudspeaker.
***
யுத்தம் மீளவும் ஒரு பீதிக்கனவென எம் புழங்கு வெளிகளில் கவியத் தொடங்கிய நாட்களில் முரண்வெளியைக் Blog ஆக கொண்டுவருவது திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். Blogging இன் அடிப்படையான நுணுக்கங்களோ தொடர்புறும் வழிகளோ தெரிந்திருக்காத நிலையில் Blogspot இல் ஒன்றைப் பதிந்து விட்டு சிறுபத்திரிகைகளிலும் இதர வலைப்பதிவுகளிலும் பெற்ற மின் அஞ்சல் விலாசங்களுக்கு கடந்த வருடம் டிசம்பரில் தெரிவித்தோம். இது மட்டுமே நாங்கள் செய்தது. எமது Blog Format இல் இருந்திருக்கக் கூடிய வாசிப்புச் சிரமங்களையும் பிரதிகளின் நீளத்தையும் பொருட்படுத்தாது அவற்றை வாசிப்புச் செய்து கதையாடிய அனைத்து தோழர்களுக்கும் எமது நன்றிகள்.
முரண்வெளியிலிருந்து பிரதிகளை எடுத்து எழுத்துப்பிழை நீக்கி மீள்பதிவிட்டு பின்னூட்டங்கள்/விவாதங்களை கோரிய சக வலைப்பதிவர்களான சத்தியக்கடதாசி, பெட்டை, தமிழ்சேர்க்கிள், மதி கந்தசாமி, கோவி.கண்ணன், மற்றவர்கள் என அனைவர்க்கும் நெகிழ்ச்சியுடன் கூடிய எம் நன்றிகளும் அன்பும்.
முரண்வெளி ஒரு இணையத்தளமாக வருவதற்கு தாமாகவே முன்வந்து உதவிய நண்பர்களுக்கு எம் நன்றிகள். அவர்களுக்கு இருந்திருக்கக் கூடிய அன்றாட நேரப்பிரச்சனைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் என்ற வகையில் எமது வலைப்பதிவில் உள்ளவற்றை பிழை திருத்தியும், வேறு எழுத்துருக்களில் உள்ளவற்றை யுனிகோடில் மாற்றி தந்தும், வலையேற்றியும் தருவதற்கு அவர்கள் பட்டிருக்கக் கூடிய சிரமங்களை (அவர்கள் சொல்லாவிட்டாலும்) ஊகிக்க முடியும். கருத்தியல் திணிப்புகளை அவர்கள் செய்யவுமில்லை. (அச்சு ஊடகங்களில் நாம் எதிர்கொண்ட மிகச்சிக்கலான அம்சம் இது) நாம் எமது நன்றிகளுக்கு மேலாக எதைச் சொல்ல முடியும்? தெரியவில்லை.
முரண்வெளி வலைப்பதிவில் இருந்திருக்கக் கூடிய சிரமங்கள் இத்தளத்தில் அவ்வளவாகயிராது என நம்புகிறோம். ஆகவே நண்பர்களே, தோழர்களே கதையாடலுமான உரையாடலுமான எம் கடந்து செல்லலில் (தப்பித்தலில்?) இணைந்து கொள்ளுங்கள்.
***
2 - எமது அரசியல்!!! & கதையாடலுக்கான அழைப்பு
***
||எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக முரண்வெளியைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் - நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.||
இது கடந்த டிசம்பரில் முரண்வெளியின் வலைப்பதிவேற்றத்தை ஒட்டி நாம் எழுதியது. இந்த ‘அரசியல் கொள்கையில்’(!) மாற்றங்கள் ஏதுமில்லை. சின்னப் பிள்ளைகளாய் ‘பெரியவர்களின்’ ‘பெரியவர்களுக்கான’ தெருக்களில் நடந்து செல்வது எப்படியிருக்கிறது? இது பற்றித் தான் நாம் பேச விரும்புவது.
எங்களது கத்தல்களுக்கும் கதறல்களுக்குமான உங்களின் மறு வினைகளைக் கோரி நிற்கிறோம், நீங்கள் எங்களுக்குச் சொல்லப் போகிற கதைகள் என்ன? பதில்கள் என்ன?
முரண்வெளி
Thursday, March 22, 2007

எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக முரண்வெளியைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் - நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.
அடையாளம் காணப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டு, ஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூட, அல்லவா?
முரண்வெளி கோப்புகள் மின் அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்படும்.
எமது பெறுநர் பட்டியலில் நீங்கள் இணைந்து கொள்ள விரும்பின் எமது தொடர்பு மின் அஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணி பற்றி தெளிவான எல்லைக் கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
எதிர்வினைகள், கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகளுக்கு: muranveli@yahoo.co.in
தொடுப்பு கொடுக்க:
<a href=”http://muranveli.net”><img src=”http://muranveli.net/logos/muranveli-logo.jpg”></a>
வெட்டி ஒட்டவும்.
