July 13th, 2007
றியாஸ் குரானாவின் மறுமொழிகள் : அடிப்படைவாத சீற்றத்துக்கு பின்-நவீன முலாம்?
________________________________________பகுதி I_____________________________________________
கதையாடல்களுக்கு அழைப்பு விடுத்து எமது கதையாடல்களை முன்வைத்து இயங்கிய போதும் ஓரிரு சக வலைப்பதிவர்களைத் தவிர்த்து எமது கதையாடல்களை யாரும் செவிமடுத்ததாய்க் காட்டிக் கொண்டது இல்லை. மௌனத்தால் எதிர்க்கருத்தைக் கொன்றுவிடுகிற தமிழ் அறிவு/இலக்கியக்காரர்களின் புலத்தில் எமது கதையாடல்களுக்கு செவிமடுப்பாக மாத்திரமன்றி எமது கதையாடல்களுக்கான எதிர்க்கதையாடலாகவும் வெளிப்படுகிறது றியாஸ் குரானாவின் முரண்வெளி தொடர்பிலான பிரதி.
எமது விமர்சனத்தை வாசித்து அதற்கான தனது தரப்பு உரையாடலைச் செய்த றியாஸ் குரானாவுக்கு எமது நன்றிகள்.
றியாஸ் குரானா முன்வைப்பவற்றுக்கான பதில்களை விரிவாக எழுதுகிற சூழல் இப்போது எமக்கு இல்லை என்பதாலும் பரீட்சைத் தயார் செய்தல்கள், வகுப்புக்கள் போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாலும் எமது மறு-உரையாடலை றியாஸ் குரானாவின் கூற்றுக்களுக்கான மறுப்புக்களுடன் நிறுத்திக் கொள்கிறோம். இரண்டு மாத இடைவெளியின் பின் எமது இந்த உரையாடல் நிச்சயம் தொடரும்.
பரீட்சைநெருக்கடியினால் ஏற்படும் அவசரமும் ஏனைய காரணிகளும் எமது இந்த உரையாடற்பிரதியைத் தாக்கி இயக்குவதை நாமே உணர்ந்த போதும் தவிர்க்கவியலாத காரணங்களினால் இப்படி எழுத நேர்கிறது.
இதை எழுதுவதற்கு எம்மை ஊக்கப்படுத்திய விசரன்/விசாரனுக்கும் பிழைதிருத்துவதில் உதவிய எழிலுக்கும் எமது நன்றிகள்.
_______________________
றியாஸ் குரானாவின் வாக்கியங்கள் = Black + Bold + Italicize
எமது கருத்துக்கள் = Normal + Black
பிறரது மேற்கோள்கள் = Deep Blue + Italicize
முக்கியமான இடங்கள் = Bold
_______________________
||ஒரு தமிழ் நண்பர் சொன்னார் ‘தமிழ் தேசியப் பெருங்கனவுக்கு உம்முடைய இருப்பு ஆபத்தானது. நீர் கொல்லப்பட வேண்டியவர்’ என்று சொல்லி சிறு இடைவெளிக்குப் பிறகு அது Joke எனச் சொன்னார். நான் தொலைபேசித் தொடர்பை துண்டித்துவிட்டேன். அவர் சொன்ன தமிழ் தேசியப் பெருங்கனவு என்ற சொல்லே பிரதி எங்கும் பயன்படுத்தப்படுகின்றது. நண்பரே எனது உடல் எதுவித பாதுகாப்புமற்று திறந்தே கிடக்கின்றது.||
மேலேயுள்ள வசனங்கள் றியாஸ் குரானாவின் பிரதியில் முக்கியப்படுத்தப்பட்டு அவரது உரையாடலின் தொடக்கமாகவும் இடம் பெறுகிறது. இந்த வாக்கியத்தின் நோக்கம் குறித்த ‘நண்பரும்’ முரண்வெளியினரும் ஏதோ வகையில் தொடர்பு பட்டவர்கள் என்பதை சொல்வது தான். தான் கொல்லப்படும் சூழலில் இருப்பதாயும் முரண்வெளியினர் கொல்லப் போகிறோம் என்று அச்சுறுத்தல் விட்டுக்கொண்டிருப்பதுமான மாயை ஒன்றை இவ் வாக்கியம் கட்டமைத்து வாசகரை பரிதாபம் காட்டுமாறு செய்கிறது. இப்படியான மலிவான உத்திகளை தமிழ்ப்பட வில்லன்களிடம் என்றைக்கோ கண்டாகி விட்டது. முரண்வெளியினர் யாரும் றியாஸிடம் இவ்வாறு பேசியது கிடையாது. றியாஸுக்கு விருப்பமிருந்தால் தன்னோடு பேசிய அந்த நபரின் தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கண்டு பிடிக்க முயன்று பார்க்கலாம். கைத்தொலைபேசி என்றால் அனைத்து சேவை வழங்குனர்களுமே அழைப்பு வருகையில் குறித்த இலக்கத்தை இனங்காணும் வசதியை செய்து கொடுக்கிறார்கள்!! ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் போன்ற ஒன்றுக்கும் உதவாத நிறுவனங்கள் கூட Caller Id வசதியை built-in ஆக்கியுள்ளன!! இப்படியிருக்கையில் குரானா போலீஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு எதற்கும் போகாமல்; எம்மிடம் வந்து ‘வாருங்கள் வந்து என்னைக் கொல்லுங்கள்’ என்று எம்மிடம் வந்து அழைப்பு விடுவதன் நோக்கம் என்ன? முரண்வெளி தொடர்பாக ‘கொலைகாரர்’ என்கிற புனைவை ஏற்படுத்துதல் இல்லையா! அவருக்கு அப்படியொரு அழைப்பு வந்திருக்குமாயின் உடனே மேற்குறித்தவொன்றை அவர் செய்திருப்பார் இல்லையா? ஏன் செய்யவில்லை? முரண்வெளியை எதிர்கொள்வதற்குப் போயும் போயும் இந்த மட்டரக சினிமா உத்திதானா கிடைத்தது??
)(-)(
||ஈமெயிலில் கிடைத்த பிரதி ஒன்றாகவும், அவருடைய முரண்வெளி வலையத்தளத்தில் காணக்கிடைத்தது. வேறு பிரதியாகவும் இருந்தது. நீக்கப்பட்டும், இணைக்கப்பட்டுமான ஒரு பிரதியை சந்திக்க நேர்ந்தது||
||எமக்கென அனுப்பப்பட்ட பிரதிக்கு உரிமை கோரும் ஒரு பெயரும், முரண்வெளி வலைத்தளத்தில் சந்தித்த பிரதி;க்கு வேறு இரு பெயர்களும் உரிமை கோரியபடி நின்றது. இது குழப்பகரமானது ||
ஈமெயிலில் அனுப்பப் பட்டது பெருவெளியின் பக்கங்கள், அச்சுச் செலவு ஆகியவற்றை மனங்கொண்டு சுருக்கப்பட்ட ஒரு வாசகர் கடிதம் மட்டுமே, அது ஹரியால் எழுதப்பட்டது. முரண்வெளியில் முதலாவது மற்றும் இரண்டாவது இதழ்களுக்கு செய்யப்பட்ட வாசிப்புப் பிரதியும் அந்தக் கடிதமும் ஒன்றாக இருந்தாக வேண்டும் என்று எங்கு சட்டமிருக்கிறது? மேலும் இது ஹரிஹரஷர்மாவினுடைய வலைத்தளம் அல்ல. இணையத்தொடர்புகள் அற்ற பெருவெளிக்கு போன் செய்து இப்படியான் இணையத் தளங்கள் உண்டு என்று அறிவிக்கிற வேலையை தொலைபேசி வசதி உள்ள அவர் செய்தார் என்பதால் முரண்வெளி அவருடைய வலைத்தளமா? முரண்வெளியில் அப்படி எங்காவது எழுதி வைத்திருக்கிறோமா?
நிற்க. இரண்டு பெயர்கள் உரிமை கோரினால் உங்களுக்கு என்ன குழப்பம் வந்து தொலைத்தது?
)(-)(
||குழப்பகரமான பெயர்களையுடைய பொறுப்பாளிகளின் குறித்த வாசிப்புப் பிரதி ||
குழப்பகரமான பெயர்கள் இருந்தால் என்ன விட்டால் என்ன? பெயரில் ஏதாவது அரசியல் வெளிப்பட்டிருக்கிறது என்றால் அதைத் தாராளமாகக் கட்டுடைத்துக் காட்டுங்கள் - வரவேற்கிறோம்; அதை விட்டு விட்டு ‘குழப்பகரம்’ ‘குழப்பகரம்’ எண்டு குலைப்பன் காய்ச்சல் வந்தவன் கணக்கில் அனுங்கினால் என்ன பண்றது?
)(-)(
||கடந்த காலங்களில் மதிப்பிடுதல், அளவிடுதல், தரப்படுத்தல் போன்ற சொற்கள் கொண்டிருப்பதாக கருதத்தக்க நிலைப்பாடுகளை கலைத்துப் போடுவதில் கவனம் செலுத்தி வருவதை சொல்லத் தேவையில்லை. அதற்கு மாற்றாகத்தான் வாசிப்புப் பிரதி என்ற சொல்லாக்கத்தை முதன்மைப்படுத்தினோம். ||
இக்கூற்றில் ஏதோ இவர்கள் தான் ‘வாசிப்புப் பிரதி என்கிறதை முதன்மைப்படுத்தினார்கள் என்ற தொனி தெரிகிறது. டிஜே தமிழனின் வலைப்பதிவில், பெட்டையின் வலைப்பதிவில் பெருவெளிக்கு முந்தைய காலத்தில் அவர்கள் எழுதிய குறிப்புகள் சில ‘வாசிப்பு’ என்கிற பிரிவுள் வகைப்படுத்தப்படுவதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
‘வாசிப்பு’ என்பது விமர்சனம், மதிப்பீடு போன்றவற்றுக்குப் பதிலியாகப் பயன்படுத்தப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாகிறது. சார்த்தரின் காலத்தில் ‘A critique of’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 60களுக்குப் பிறகான காலப்பகுதியில் ‘A critical reading of…’ ‘Reading Sexual Difference’ ‘Reading Nabakov’s Lolita in Tehran’ ‘Re-reading Robert Knox’என்றவகையில் ‘Reading’ முதன்மைப்படுத்தப் பட்டது. றியாஸ் குரானா ‘வாசிப்புப் பிரதி’ என்பதை ‘நான்தான் அறிமுகப்படுத்தினேன்’ என்று சுயதம்பட்டம் அடிப்பதன் பின்னிருக்கிற விசயங்கள் இவை.
மதிப்பீடு/தரப்படுத்தல் பற்றி: றியாஸ் குரானாவுக்கும் நவீனத்துவம் பாவித்துக் கொண்டிருந்த சொற்களுக்கும் அப்படியென்ன பகை? மதிப்பீடு/தரப்படுத்தல் என்பவை நவீனத்துவத்தில் தொழிற்பட்ட விதம் வன்முறையானது என்பதை நாம் மறுக்கவில்லை. அவற்றால் புறமொதுக்கப்பட்டன சார்ந்த, அவற்றின் பக்கம் நின்றியங்கும் மதிப்பீட்டு/தரப்படுத்தற் கருவிகளையே பின்-நவீனத்துவம் + இதர நவீனத்துவ எதிர்ப்பு இயக்கங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. (அப்படிக் கிடையாது என்று பிரகடனப்படுத்திய போதும்) இப்படியாக, அ.மார்க்ஸ் செய்து கொண்டிருப்பதும் சரி, றியாஸ் குரானா செய்து கொண்டிருப்பதும் சரி மதிப்பீடு/தரப்படுத்தல் தான். இங்கு இல்லாமல் இருப்பது நவீனத்துவ மதிப்பீட்டுச் செயன்முறை பயன்படுத்திய அளவீடுகள் கொண்டிருந்த நெகிழ்ச்சியற்ற மூடப்பட்ட தன்மையும், வன்முறையும் தான்.
)(-)(
||வாசிப்புப் பிரதி என்ற மாற்றுச் சொல்லாடல் கூட தரப்படுத்தும், மதிப்பீடு செய்யும் செயற்பாடுகளுக்கு ஈவிரக்கமின்றி, எதுவித கவனமுமின்றி பயன்படுத்தப்படுவதை கவலையோடு சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். ||
முதலாவது பெருவெளியில் ‘வாசிப்புப் பிரதி’ என்ற அடையாளப்படுத்தலுடன் அநாமிகனின் கவிதைத்தொகுதி குறித்து மஜீத் எழுதியவை மதிப்பிடுதலையன்றி வேறென்ன கன்றாவியைச் செய்து கொண்டிருக்கின்றன? மஜீத்தின் வாசிப்புப் பிரதியில் நேர்மையான மூன்று மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைவத்தமிழ்த்தேசியவாதியான மு.பொ புளுகியபோது அவரது புளுகலில் என்ன குளிர் காய்ந்து கொண்டா இருந்தீர்கள் தோழர்களே? அவரது பிரதியில் வெளிப்படையாகவே மதிப்பீடு என்ற பதம் இருந்தும் மறுப்பெழுதாமல் இருக்குமாறு தடுத்தது எது தோழர்களே? அந்தப் புகழ்ச்சியில் மூத்திரமடிப்பதற்கு உங்கள் குறிகளுக்கு என்ன dysfunction ஏற்பட்டுத் தொலைத்தது. ஈவு இரக்கத்துடன் கவனங்களுடன் வாசிப்புச் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள். ஈவு இரக்கத்துடன் விமர்சனம் செய்யும் படி எங்களுக்கு சொல்கிற அருகதை உங்களுக்கு இல்லை!!
)(-)(
||அறிவொளிக் காலத்தின் கொடையாக கருதப்படும் பகுத்தறிவின் முக்கியத்துவம் என்பது இன்னும் சிலாகிக்கப்படுவதும்||
பகுத்தறிவின் வன்முறை மிகவும் உக்கிரத்துடன் தொழிற்பட்ட மேற்கு நாடுகளில் பகுத்தறிவை மறுக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்றைக்கும் மூட நம்பிக்கைகள், சாதி மேலாதிக்கம், மந்திரங்கள், பூசை புனஸ்கார ஆசாரங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எமது சமூகத்தில் பகுத்தறிவிற்கான முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் பின் -நவீனத்துவம் பகுத்தறிவே வேண்டாம் என்றோ தருக்கம் வேண்டாம் என்றோ சொல்லவில்லை. அதன் வன்முறையைச் சுட்டுகிறது. பகுத்தறிவும் தருக்கமும் புறமொதுக்குகிற குரல்களுக்கான நியாயங்களை முன்வைக்கிறது; பகுத்தறிவுக்கும் அப்பாலான இருப்பியற் கேள்விகளையும் ஆராயும் படி சொல்கிறது; அவ்வளவே. பகுத்தறிவு- தருக்கம் போன்றவற்றைக் கேட்டவுடனேயே நவீனத்துவம் என்று அலர்ஜன்களாக இனங்கண்டு கொள்வோருக்கு என்ன மருந்திருக்க முடியும்?
)(-)(
||பூமி தட்டையானது என்றிருந்தால் இதற்குப் பொருந்திவருகின்ற கருத்தாக்கங்களெல்லாம் அறியப்பட்டதாகவும், அதுவே அறிவாகவும் மாறுவதோடு, பூமி பற்றிய ஏனைய கருத்தாக்கங்கள் அறிவல்ல என்றும் பிழையானது, புறமொதுக்கப்படக் கூடியது என்ற வகையில் பகுத்தறிவு தன்னை வடிவமைத்துக் கொண்டதை நாமறிவோம்.)
விதிகளுக்கு பொருந்தி வருவதல்ல அதை மறுத்தெழுவதே அறிவு என பின்நவீனத்துவம் முழங்கிற்று. பூமி தட்டையானது என்பதற்கு பொருந்திவருகின்ற கருத்தாக்கங்களையே நம்பியிருந்தால் பூமி கோளவடிவமானது என்பது பிறந்திருக்காது. விதிகளை ஏதோ ஒரு கணத்தில் மீறியதே அறிவாக இருந்திருக்கிறது என்பது புலப்படும். மரத்திலிருந்து பழம் விழுவது இயற்கையானது என்றிருந்தால் புவியீர்ப்பு விதி நமக்கு கிடைத்திருக்காது என பின்நவீனத்துவம் பகுத்தறிவின் தரப்படுத்தல் மற்றும் மதிப்பீடு போன்ற நிலைப்பாடுகளுக்கு உதவுகிற, பொருந்திவருதல் என்பதை காலைக்கடனைப் போல கழித்து வெகுநாளாகிற்று. ||
றியாஸ் குரானாவுக்கு இருக்கிற விஞ்ஞான அறிவின் விசித்திரம் தான் என்னே? ஐன்ஸ்டீனையும் பின்நவீனத்துவத்தையும் சம்பந்தப்படுத்தியிருந்தாலாவது பரவாயில்லை. இது தொடர்பில் பின்-நவீன ஆசானும் விஞ்ஞான ஆசிரியருமான அ.மார்க்ஸ் றியாஸ் குரானாவுக்கு ஞானோபதேசம் பண்ணவில்லையா? பூமி தட்டையானது என்ற கருத்தாக்கம் பகுத்தறிவின் பாற்பட்ட ஒன்றாக யார் சொன்னது? அது மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுகிப்போய் இருந்த மத்தியகாலக் கருத்து. பகுத்தறிவின் அடிப்ப்படையில் சில நடமுறை உதாரணங்களைத் தொடர்பு படுத்தி ஆராய்ந்து தான் கோள வடிவினது பூமி என்று கண்டு பிடித்தார்கள். [உ+ம்= கடற்கரையில் நின்றால் கப்பலின் உச்சி முதலில் தெரிவது etc, மேலும் காண்க: தரம் ஆறு புவியியல் பாடநூல்] அப்புறம் நியூட்டனின் கண்டு பிடிப்புப் பற்றிய வியாக்கியானம், பழம் விழுவது இயற்கையானது [கடவுளின் செயல்] என்று சொல்லிக்கொண்டிருந்த மூடநம்பிக்கையை மறுத்து நியூட்டன் பகுத்து அறிந்து கொண்டதே புவியீர்ப்புக் கொள்கை. இதைப் போய் பகுத்தறிவை மறுத்தல் எண்டு சொன்னால், எங்கு போய் முட்டுறது?
)(-)(
||
1.ஆசிரியரின் நோக்கத்தை உதவிக்கழைத்து அதிலிருந்து ஊகிக்கும் அர்த்தம்
2.சொற்களுக்குள் இருக்கின்ற அர்த்தங்களின் உறவு, முரண்பாடு, இடையீடு, குறுக்கீடு போன்றவற்றின் பங்கேற்பை
நம்பி அதனூடாக பெறப்படும் முடிவுகள்.
3.நிலவுகிற சூழலில்-மைய நீரோட்டத்தில் ஏற்கப்பட்டதாக கருதி செயலில் உள்ளவைகளோடு பொருந்திவரக்கூடியது
அர்;த்தம் என்பதின் பால் கவன ஈர்ப்பை செய்வதன் மூலம் கிடைப்பதாக கருதுவது
4.வாசகன் தான் கொண்டிருக்கும் அர்த்தத்தை-அதாவது தான் அர்த்தம் என்று கருதுவதை மற்றவைகளிலிருந்து
கண்டடைதல் அல்லது வாசகனின் அர்;த்தமே பிரதி கொண்டிருக்கும் அர்த்தமாக முன்வைத்தல்.
||
றியாஸ் குரானா பட்டியலிடுகிற இந்த நான்கும் மட்டுமே இதுவரையான வாசிப்புச் செயற்பாட்டைத் தீர்மானித்ததாகக் கொள்ளவியலாது. புத்தகத்தின் வடிவமைப்பு/ அதைப்பிரசுரிக்கிற நிறுவனம்/ பயன்படும் நிறங்கள் இதெல்லாம் கூட அர்த்தத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. உதாரணமாக அ.மார்க்ஸின் பிரதிகளை அடையாளம், கருப்புப் பிரதிகள் போன்ற பிரசுர நிறுவனங்கள் வெளியிட்டால் ஒருவித வாசிப்பும் ஆனந்தவிகடன் புக் கிளப் வெளியிட்டால் இன்னொரு வாசிப்பும் ஏற்பட்டேயாகும். சரிநிகர் ஆர்ட் பேப்பரில் பிரசுரிக்கப்பட்டதாலேயே அதன் பழைய ரசிக கோடிகள் பலரும் அதிருப்தியுற்றதை இங்கு உதாரணம் காட்ட விரும்புகிறேன். இப்படியாக பல நிரற்படுத்தமுடியாத காரணிகளின் ஊடாட்டத்தால் தீர்மானிக்கப்படுவதே வாசிப்புச் செயற்பாடு. பின் நவீன பாடக்குறிப்புகள் இப்படியாகத்தான் எமக்கும் சொல்லின - ஆனால், நாம் எமது சூழலின் தன்மைகளை அவதானிக்க வேண்டும்.
)(-)(
||ஆசிரியரின் நோக்கம்தான் பிரதிக்கான அர்த்தத்தை தீர்மானிப்பதில் முழுப்பங்காற்றுகிறது என அறிவிக்கிறது, முதலாவது முறைமை. அவனுடைய நோக்கத்தை தெரிந்து கொள்வதினூடாக அர்த்தப்படுத்தலை நோக்கி நாம் நெருங்கிவிடுவதாக கதையாடுகிறது. அவனுடைய நோக்கத்தை விளங்குவதும் புரிந்து கொண்டு செயலாற்றுவதும், அதை அறிவதுமே அர்த்தத்தை நமக்கு தென்படவைக்கிறது என்றாகிறது. ஆசிரியன் இல்லாத பட்சத்தில் அர்த்தம் சாத்தியமில்லை என்கிற இன்னொரு கதையாடலையும் அது கொண்டிருக்கிறது. ஆசிரியனிடமே அர்த்தத்தை அறிவதற்கான சாவியை ஒப்படைத்துவிட்டு பிரதிக்கு வெளியே காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் அர்த்தத்தை கண்டடைவதில் ஆசிரியனின் பங்கே செயலூக்கமுள்ளதாக அறிவிக்கிறது. ஆசிரியனின் நோக்கம்தான் அர்த்தத்தின் இருப்பிடம் போன்ற கதையாடல்களையெல்லாம் நம்முன்னே பரப்பிக்கொண்டிருக்கிறது. இங்கு ஆசிரியன் இன்றி அர்த்தம் அமையாது என்ற அம்சம் இருப்பில் அத்துமீறி நுழைக்கப்படுவதை அறியலாம். ||
இன்றைய தேதிக்கு இலக்கியப் புலத்தில் வினைபுரிகிறவர்களோ வாசிப்பாளராயிருப்பவர்களோ ‘ஆசிரியனிடமே அர்த்தத்தை அறிவதற்கான சாவியை ஒப்படைத்துவிட்டு பிரதிக்கு வெளியே காத்திருப்பது’ இல்லை. தம்மளவில் வினையாற்றலுள்ள பங்காற்றுனர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியருக்கு இருக்கக் கூடிய உள்நோக்கங்கள் ஊகிக்கப்படுகின்றன. சூழலில் பிரதியின் வினையாற்றுகை, அதில் ஆசிரியனுக்கு இருக்கிற விருப்பு வெறுப்புகள் என்பன ஆசிரியர் என்கிற பிரதியின் இயக்கத்துக்கான காரணிகளாக ஊகிக்கப்படும் செயற்பாடே இப்போது நடந்தேறுவது(அவன்/ளது செயற்பாடுகள், பிரதிகளாலான பிம்பம்). ‘ஆசிரியரே வருக அர்த்தம் கற்பிக்குக’ என்று யாரும் இங்கு விழுந்து கிடக்கவில்லை. றியாஸ் குரானா இன்றைக்கும் 80களில் இருந்து கொண்டு கதைப்பது ஆச்சரியம் தான்.
)(-)(
||~நிலவுகிற சூழல்| தான் அர்த்தத்தை அடைவதற்கு உதவுகிறது என்று வலியுறுத்துகிறது. இது யதார்த்தவாதம் என்பதாலும் நமது சூழலில் அதிகம் பயன்படுத்தப்படுவது என்பதாலும் விபரிப்பதை தவிர்க்கலாமா? மேலோட்டமாகவேனும் கதைப்போம் என நினைக்கிறேன். இது அனேகமாக அர்த்;தத்தை கண்டடைவது என்பதை தவிர்க்கிறது. அர்த்தம் ஏற்கனவே கண்டடையப்பட்டு விட்டது. கண்டடையப்பட்டுவிட்டதாக கருதும் அர்த்தத்தோடு பொருந்தி வருபவைகளையே அர்த்தமுடையவைகள், மற்றவைகள் அர்த்தமற்றவைகள் எனப் பரிந்துரைக்கிறது. அர்த்தமுள்ளதா அர்த்தமற்றதா என பரீட்சிப்பதை தனது வினை என முன்மொழிகிறது. நிலவுகிற சூழலில்; அதாவது மைய நீரோட்டத்தில் எது அர்த்தமுள்ளது என புழங்குகின்றதோ அதைக் குழப்பிவிடாமல் அதோடு ஒத்துப்போவது எங்கு நிகழ்கிறதோ அதுவே அர்த்தமுள்ளது. ||
அர்த்தம் நிலையற்றது என்கிற அறிவிப்பை நாம் அறிவோம். ‘நிலவுகிற சூழல் அர்த்தத்தை அடைவதற்கு உதவுகிறது’ என்கிற மொழிதலில் பிரச்சனையாக இருப்பது ‘அர்த்தத்தை அடைதல்’ என்கிற மொழிதல் மட்டுமே. அந்த மொழிதல் ‘அர்த்தம்’ என்பதை அடைந்து விட முடியும் என்பதான சத்தியமொன்றைச் செய்கிறது [(ஒரு அர்த்தமே உள்ளது அதை அடையமுடியும்) ]. அர்த்தங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு விளையாட்டில் ‘நிலவுகிற சூழல்’ என்பது குறுக்கீடு செய்யும் சாத்தியங்களைத் தவிர்க்க வேண்டும் என்று யார் சட்டமியற்றியது? அப்படியானதொரு செயல்முறைக்கு யதார்த்தவாதம் என்று முத்திரை குத்துவது எவ்வளவு தூரம் சரி? ஷோபா சக்தியின் பிரதிகள் நிலவுகிற சூழலுடன் குறுக்கீடு செய்து கொள்வதன் மூலம் எவ்வகையான புரிதல்களை உண்டு பண்ண முயற்சிக்கின்றன என்று ஆய்வு செய்கிற ஒரு செயற்பாட்டை வெறும் யதார்த்தவாதம் என்று குறுக்க முடியுமா? அப்படி செய்கிற ஆய்வு, நடைமுறை அரசியல் யதார்த்தத்துக்கு பொருந்தி வராவிடில் அர்த்தமற்றது என்று ஷோபா சக்தியை ஒதுக்கும் வினையைச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அங்கு நெகிழ்ச்சித் தன்மை இருந்தே தீரும். றியாஸ் குரானா விபரிப்பது போன்ற இறுக்கம் உண்மையில் கற்பனையான ஒன்று. பின்-நவீன விமர்சனத் திலகமாகத் தன்னைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிற அவர் நவீனத்துவத்தின் வன்முறையை உருப்பெருக்குவதன் மூலம், விமர்சகராக தனது பங்களிப்பையும் உருப்பெருக்கிக் கொள்கிறார் என்றே காண்க!
)(-)(
||அதாவது அர்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில் ஒரு பகுதியைச் செயலூக்கமானதாகவும் மற்றயதை செயலூக்கமற்றதாகவும் கொள்வதினூடாகத்தான் அர்த்தத்தை கண்டடைய முடியும் என்கிறது இதை விரிவுபடுத்துவோமெனில் ஆசிரியனின் நோக்கத்தை முதன்மைப்படுத்தினால் வாசகனின் அனுபவத்தை செயலூக்கமற்றதாக ஏற்கச் செய்கிறது. மொழியை செயலூக்க முள்ளதாக வரித்துக் கொண்டால்ஆ சிரியரின் நோக்கத்தை செயலூக்கமற்றதாக ஏற்கச் செய்கிறது. சூழலை முன்னிலைப்படுத்தினால் மொழியின் குறுக்கீட்டை செயலூக்கமற்றதாக பணிக்கிறது. வாசகனின் அனுபவத்தை செயலூக்கமுள்ள வினை எனக் கருதினால் பிற அம்சங்களை செயலூக்கமற்ற நிலைக்கு அனுப்பிவிடுங்கள் என வலியுறுத்துவதை அவதானிக்கலாம். எனவே, இம்முறைகள் அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கைகளோடு-ஏதாவது ஒரு முனை மட்டுமே செயலூக்கமானது. அதற்கெதிரே இருக்கும் மறு முனை என்பது செயலூக்கமற்றது. என்ற நிலைப்பாடுகளை தமக்கிடையான ஒரு பொதுப்பண்பாக அமைத்துக் கொண்டு செயற்படுவதை அவதானிக்கலாம். ||
இப்படியாக றியாஸ் குரான விபரிப்புக்குட்படுத்தும் சூழல் எந்த நாட்டில் உள்ளது என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். எனக்குத்தெரிந்து இப்படியான இறுக்கத்துடன் இருந்த சூழல் மாறிப்போய் பத்துப் பதினைந்து வருடங்களாகி விட்டது. அதுவும் இன்றைக்கு வலைப்பதிகிற காலகட்டத்தில் பின்னூட்டங்கள் மட்டுறுத்தாத வலைப்பதிவர்களே அதிகம். வாசிப்பாளர்கள் தமது பங்கை எவ்வளவு தூரம் ஆற்றுகிறார்கள் என்பது பின்னூட்டங்களைப் பார்த்தால் தெரியும். வலைப்பதிவுகளில் பிரதியாளர் துருத்திக் கொண்டு நிற்பது இல்லை. இடுகையை இட்டபின் அவர் செத்துப் போய் விட வாசிப்பாளர்களிடையே அந்த இடுகை தொடர்பிலான விவாதங்கள் தொடங்குகின்றன. இங்கு எல்லாமே தேவைக்கேற்ப முதன்மைப்படுத்தப்படும் சூழல், இடுகையின் வடிவமைப்பு, வாசிப்பாளர், பின்னூட்டங்கள். றியாஸ் குரானா குறிப்பிடுவதைப் போல ஒன்றைத் தூக்கினால் மற்றொன்று மரித்துப் போகிறதான தன்மை நிச்சயமாக இல்லை. கடாசி எறியப்பட்ட முன் நவீன ஆண் கடவுளே, உமது பாதங்களைத் தயவு செய்து இக்காலப்பகுதிக்குள் பதிப்பீராக!!! உங்களுக்கு தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் தேவையென்றால் ஏற்கனவே இருக்கிற இலகுவான வழிமுறைகளைக் கையாளுங்கள். சூழல் பற்றி ஒரு பயங்கரமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டு அதனுடன் சண்டை புரிகிற பெரும் வீரனாக உங்களைக் காட்டிக்கொள்கிற கேவலத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
)(-)(
||மதிப்பீட்டு முறையைப் பயன்படுத்துபவர்களின் கடைசி எச்சமாக தலையில் விழுந்து மூக்கு நோக்கி வழிந்து கொண்டிருக்கும் சகிக்க முடியாத நாற்றமாக முரண்வெளி நண்பர்களும் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. தங்களை இந்த மதிப்பீடு மற்றும்தரப்படுத்தல்கள் போன்றவற்றுக்கு வெளியே நிறுத்திப் பார்க்க வேண்டுமென்று கூச்சலிட்டாலும் அவர்கள் செய்து கொண்டிருப்பது என்னவாக இருக்கக்கூடும் என்ற வாசிப்பை செய்ய முற்பட்டோமானால் நாம் கண்டடைவது மதிப்பீட்டின் மூலமான வாசிப்புக்கள்தான். ||
எங்களை இப்படித்தான் பார்க்க வேணும் எண்டு இங்கு எந்த சட்டக்கோவையையும் அமுல் படுத்தி வைத்திருக்கவில்லை. யாருக்கு என்ன தோன்றுகிறதோ அது அப்படியே!
எமது நிலைப்பாட்டை நாம் முன்வைக்கிறோம். உங்களது நிலைப்பாட்டை நீங்கள் முன்வைக்கிறீர்கள். எங்களிடமிருக்கிற அளவு கோல்களைக் கொண்டு நாங்கள் அளந்து கொண்டிருப்பதைப் போலவே நீங்கள் உங்களுடைய அளவு கோல்களைப் பயன்படுத்துகிறீர்கள். இருவரும் குறுக்கீடு செய்கிற புள்ளிகளில் இருந்து ஆரம்பிக்கிறது எமக்கிடையிலான உரையாடல்/தெருச்சண்டை/அடிதடி/கத்தல்/கூச்சல்/whatever. பெருவெளியினர் மதிப்பீடுகள் மற்றும் தரப்படுத்தல்களை இதுவரை செய்யவில்லையா என்பதையும் கேட்க விரும்புகிறோம். மதிப்பீடு/தரப்படுத்தல் இவை தவிர்க்கமுடியாதன என்பது எனது அபிப்பிராயம். அதிகாரத்தைப் பூச்சியமாக்குவது எப்படிச் சாத்தியமில்லையோ அது போல் இதுவும்! இவற்றில் இருக்கிற வன்முறையான புறமொதுக்கல் வினைகளைக் களைவதே தேவையானது.
)(-)(
||முதலாவது கூற்று ஆரம்பிக்கும் போதே ~முஸ்லிம் தேசம்| என்ற சொற்பிரயோகமே பலருக்கு ஒவ்வாமையை உண்டுபண்ணுகிற நிலையிலுள்ளது என்ற ஒரு கருத்தையும் ~~தேசியத்தின் போதாமைகளை பேசும் இவர்களுக்குப் பின்னிருக்கக் கூடிய அச்சமிகு இயங்குவெளியையும் மனங்கொள்ள முடிகிறது|| என தனது எச்சரிகைத் தன்மையிலான புரிதலையும் முன்வைக்கிறது. ||
அப்படியானால் இவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட சூழலில்தான் இருந்து கதைக்கிறார்கள் என்றாகிறது. இவர்களது இயங்குவெளியில் எந்த அச்சுறுத்தல்களும் இல்லையென்று இவர்கள் சொல்லுவதைக் கவனியுங்கள். இத்தனைக்கும் றியாஸ் குரானாவின் வீடு தாக்கப்பட்டு, அவரது கணினி ஆவணங்கள் சோதனையிடப்பட்ட தகவலை நாம் அறிந்த பின்னரே அவரது இயங்கு வெளியினைக் குறுக்கீடு செய்யும் அச்சுறுத்தல்கள் பற்றிய தகவலாக அதைச் சொல்லியிருந்த்தோம். பெருவெளியை சிறுகதையாடல் சமூகமொன்றின் குரலாக இனங்கண்டு அதன் மீதான எமது நேசத்தையும் கரிசனையையும் அக்கறையையும் காட்டிய எமக்கே இத்தகையதொரு வாசிப்பு திருப்பி விடப்பட்டிருக்கிறது. நேச சக்திகளையே அடித்து விரட்டுவதன் மூலம் இவர்கள் எதை சாதிக்க முயல்கிறார்கள்? சரிநிகர்தானே சிராஜ் மஸ்ஹூர் போன்றவர்களையும் முஸ்லிம் தேசியக் கருத்தாக்கதையும் பெருமளவிலான மக்கள் தொகையினருக்கு எடுத்தியம்பிற்று. சேரன், ஜெயபாலன்,சு.வி போன்றோரின் நேசமிகு வரிகள் தானே ஏற்புடைய புரிதலை பலரது மனங்களிலும் ஏற்படுத்திற்று? இதையெல்லாம் மறைத்துக் கொண்டு தாம் தூம் என்று குதிப்பதில் இவர்கள் செய்ய முனைவது என்ன? ஏலவே இருக்கிற செயற்பாட்டாளர்களைப் புறந்தள்ளி தமது பெயர்களைப் பிரபலமாக்குகிற வேலைதானா இவர்களால் பண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது? அச்சமிகு சூழலிலேயே பெருவெளிச் செயற்பாட்டாளர்கள் இயங்குகிறார்கள் என்று எம்மால் சொல்லப்பட்ட ஒரு கரிசனை மிக்க கூற்று எப்படியெல்லாம் குழப்பியடிக்கப்படுகிறது என்பதிலிருந்தே இவர்களது தன்மைகள் தெரிந்து விடுகின்றன.
)(-)(
||அதுமட்டுமன்றி ~முஸ்லிம் தேசம்| என்ற ஒரு கருத்தாக்கத்தை பெரும்பான்மையான கூற்றுக்கள் குறுக்கீடு செய்ய முற்படுவதால் பல கூற்றுக்களால் அமையப் பெற்ற அப்பிரதியில் பொதுவான ஒரு ~பிரதிப் பண்பாக| முஸ்லிம் தேசம் என்ற கருத்தாக்கத்தின் இயங்கு திறனை குறுக்கீடு செய்வது ஒன்றே தனது பணிபோல வெளிப்படுத்த முயற்சிப்பதை அறிய முடிகிறது. அந்த வகையான குறுக்கீடுகளை நியாயப்படுத்துவதற்குத் தோதாக பல புகழ்ச்சிகளும், மாபெரும் அக்கரைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம். ||
a well structured conspiracy theory!!
)(-)(
||ஆக பிரதியின் பண்பு எனக் கருதத்தக்கதும், வாசகர்களை கட்டாயப்படுத்தி அழைக்கும் திசை என அறியக்கூடியதுமாக பிரதியெங்கும் மறைவாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் மூக்கை நீட்டுவது ~முஸ்லிம் தேசம்| என்ற கருத்தாக்கத்தை குறுக்கீடு செய்து தரப்படுத்தி மதிப்பீடு செய்வதற்கான விருப்புறுதி ஒன்றுதான் என சந்தேகத்துடன் அறிவிக்கலாம். ||
‘முஸ்லிம் தேசத்தின் இயங்கு திறனை’ என்பதை ‘பெருவெளிச்செயற்பாட்டாளர்களின் இயங்கு திறன்’ என்று மாற்றி வாசிக்க வேண்டுகிறோம். பெருவெளியின் செயற்பாட்டை அமைதிப்படுத்துகிற விருப்பு எமக்குண்டு என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடிப்படைவாதத்தையும் பாஸிசத்தையும் அமைதிப்படுத்தவும் அவற்றின் இயங்கு திறனைக் குறைக்கவும் விருப்பப்படுவதில் என்ன தவறுண்டு?
முஸ்லிம் தேசம் என்கிற நியாயமான கருத்தாக்கத்தைக் குறுக்கீடு செய்கிற விருப்பு எமக்கு இல்லை. அதன் பின்னிருக்கிற வலிமையான நியாயத்தை, அந்த மக்களின் துயரத்தை நாம் உணர்ந்தேயிருக்கிறோம். தனித்து மத அடிப்படைவாதம், இனத்தூய்மைவாதம் என்று பெருவெளி இயங்குவதையே நாம் சுட்டிக்காட்ட வேண்டி வந்தது. முஸ்லிம் வெளியேற்றம் தொடர்பில் முரண்வெளியில் ஆமிரபாலி, சனன் ஆகியோரின் கவிதைப் பிரதிகளைக் காண்க. அறபாத், பௌஸர், என்.ஆத்மா, நூறுல் ஹக் போன்றோருக்கு நாம் எதிர்ப்பை வெளிப்படுத்தியது இல்லை என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறோம். ‘வேட்டைக்குப் பின்’ தொகுதிக்குக் கூட எமது எதிர்க்கதையாடலை நாம் செய்தது இல்லை. அரபாத் தனது சமூகத்தின் உள் முரண்பாடுகள் தொடர்பில் தெளிவானவராகவும் தனது சமூகத்திற்கு செய்யப்பட்ட கொடுமைகளைக் குறித்து துயர்மிகு மொழியில் பேசுபவராகவும் இருப்பதால் அதற்கான எமது ஆதரவை நாம் தெரிவித்துமிருக்கிறோம். ஆனால், பெருவெளியினருக்கு அறபாத்திடம் உள்ள வெளிப்படைத்தன்மைகள், தமது சமூகத்தில் விளிம்பாக்கப்பட்டவர்கள் தொடர்பான அக்கறைகள் கிடையாது என்பதற்கு மேலாக இனத்தூய்மைவாத/அடிப்படைக் கூறுகள் வெளிப்பட்டதால் தான் அவ்வாறானதொரு கதையாடல் செய்யப்பட்டது. பெருவெளி = முஸ்லிம் தேசம் என்றொரு நினைப்பு றியாஸ் குரானாவுக்கு இருப்பதால்தான் இதழ் மீதான எமது வாசிப்பை முஸ்லிம் தேசம் மீதான தமிழர் தேசத்தின் வாசிப்பாகக் கொள்ள நேர்ந்திருக்கிறது. பிரதிநிதித்துவக் கோளாறு பின் நவீனத்துவத்தின் எந்த மூலையில் உங்களுக்குக் கிடைத்தது றியாஸ் குரானா?
)(-)(
||தமிழ் இலக்கியங்கள், தமிழில் இலக்கியங்கள், முஸ்லிம் தேச இலக்கியம் போன்ற கருத்தாக்கங்களில் எது சரியானது எது பிழையானது, எதை பயன்படுத்தலாம் போன்ற சிபார்சுகளை முன்மொழிவதாக அமைகிறது. முஸ்லிம்கள் தங்களுக்கான எழுத்துச் செயற்பாட்டுக்கு ஒரு பெயரைச் சூட்ட விரும்பும் போது கூட தமிழர் தேசத்தின்; கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை போன்ற விசயத்தின் பால் அக்கறை கொள்ள நிர்ப்பந்திப்பதை இக்கூற்று பெரிதும் தனது தேர்வாகக் கொள்கிறது. இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் எனும் அரசியல் தன்மையையுடைய சமூகம், இருப்பு, அரசியல் மற்றும் இலக்கியச் செயலாற்றுகைக்கான உரிமையைக் கொண்டிருக்கிறது என பரிந்துரைக்கும் பிரதிகள் எல்லாம் முஸ்லிம்களுடைய வெளியில் பணியாற்றுகிற இலக்கிய மற்றும் அரசியல் வகைமைக்குள் அடங்குவதுதான். அதற்காக எங்களால் சிபாரிசு செய்யப்படும் ஒரு பெயர்தான் அது. பெயரிடும் உரிமை எமக்குண்டு என்பதை அறிவிக்கும் ஒரு முயற்சி என்றளவிலே குறித்த சொல்லாக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ||
இவர்கள் தமது இலக்கியங்களுக்கு பெயர்சூட்டுகையில் ‘தமிழர் தேசத்தின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை போன்ற விசயத்தை’ நாங்கள் எங்காவது வலியுறுத்தினோமா? ‘தேச இலக்கியம்’ என்கிற கதையாடலின் பொருத்தப்பாடின்மையை/ வன்முறையை/ பொதுமையாக்கும் விருப்பையே சாடியிருந்தோம். முஸ்லிம், தமிழர், சிங்கள தேச இலக்கியங்கள் என்கிற கதையாடல் அத்தேசத்துக்குள் கையகப்படுத்தப் பட்டுள்ள உதிரிகளின் மீதான வன்முறையே என்பதை சுட்டினோம். அவ்வளவே. முஸ்லிம் என்ற அரசியல் சமூகத்தின் சுமுக இருப்பிற்காக இவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு இயங்கினால் ஏதும் பிசகில்லை. ஆனால், பெண்கள், சூபிகள், அரசுக்கு வால்பிடிக்கிற முஸ்லிம்கள் என எல்லோரையும் முஸ்லிம் தேச இலக்கியமாகக் கொள்ள வெளிக்கிடுவதன் அபத்தத்தை வெளிப்படுத்தினோம். இதைப்போலவே தமிழ்த்தேச இலக்கியம் என்கிற கதையாடலும் சாத்தியமற்றது என்பதை நாமறிவோம். இங்கு ஏன் றியாஸ் குரானா தமிழ் அடையாளத்தை எம்மீது திணிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால் அவரது ஒட்டுமொத்த விமர்சன அணுகுமுறையின் தந்திரம் புலப்படும். எதிர்க்கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்று முத்திரை குத்துதல், பின்பு அந்த முத்திரையையே விமர்சித்துக் கொண்டிருத்தல் - இதுதான் றியாஸ் குரானாவின் விமர்சனத்தின் தன்மை. இங்கு எமது தரப்பு பின் தள்ளப்பட்டு அதன் மீது குத்தப்பட்ட முத்திரையே தாக்குதலுக்காளாவதால் றியாஸ் குரானாவின் தாக்குதல்கள் எம்மீது விழுவதேயில்லை. அவரது தாக்குதல் தமிழர் தேசத்தின் மீதானது. எம்மீதானது அல்ல. ஆனால், கூர்ந்து அவதானிக்காத வாசிப்பாளருக்கு எம்மீது திணிக்கப்பட்ட அடையாளத்தில் விழும் அடிகள் எம்மீது விழுவது போலவொரு தோற்றப்பாடே கிடைக்கும். இங்கு றியாஸ் குரானா தெய்வமாகி விடுகிறார். இதுதான் பெருவெளியினரினது செயற்பாட்டின் நுண்அரசியல் என்பதை முரண்வெளி அறிவிக்கிறது.
)(-)(
||சு.ரா. தொடர்பான றியாஸ் குரானாவின் வாசிப்பைப் பற்றியது. சு.ராவைப்பற்றி சாருநிவேதிதா, எம்.ஜி. சுரேஷ் போன்றவர்களின் வாசிப்பையும் ஒற்றைவரியில் கூறிவிட்டு ஜே.ஜே. சில குறிப்புக்களையும், எக்ஸிஸ்டென்ஷலிசமும் ஃபான்சி பனியனையும் தவிர்த்துவிட்டு நவீன இலக்கியத்தைப் பேசிவிட முடியாது என்பதும் அழுத்தப்படவேண்டிய விசயங்கள் என முடிவுறுகிறது. மேலே குறித்த இரண்டுமட்டுமல்ல எதையும் தவிர்த்துவிடடு நவீன இலக்கியத்தை பேச முடியாது (ரமணிச்சந்திரன்) உட்பட என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். மதிப்பீடு என்ற முறை மேலே உள்ள உங்கள் நிலைக்கு கடுமையாக உதவியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். ||
றியாஸ் குரானாவின் எழுத்து தமிழ் இலக்கியப் பரப்பில் சு.ராவுக்கு வழங்கப்பட வேண்டிய இடத்தை குறைப்பதற்கு முயற்சிக்கிறது என்கிற உணர்வு எமக்கு இருந்தது. அவரது வாசிப்பில் நாம் உடன்படுகிற இடங்களே அதிகமென்ற போதும், சாண்டில்யனோடு அவர் ஒப்பிடும் இடத்தில் இந்த வாசிப்பு வாசிப்பாளர் மத்தியில் எவ்வாறு காவப்படும் என்பதை அறிந்திருந்ததாலேயே சு.ரா, சாரு விவாதங்களிற்கான இடத்தை மீளுறுதி செய்ய வேண்டியதாகி விட்டது. இங்கு யாரும் புறமொதுக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளட்டும் றியாஸ் குரானா. ஜனரஞ்சக எழுத்தாளர்கள் பற்றி இராகவன் தெரிதலில் எழுதிய மேட்டுக்குடி அலட்டல்களுக்கு எம்மால் எழுதப்பட்டு பிரசுரம் மறுக்கப்பட்ட எதிர்வினைப்பிரதியை றியாஸ் குரானா அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லைதான். ரமணிச்சந்திரனை மட்டுமென்ன ‘சாரதா தேவி’ புத்தகங்கள் என எழுத்தாளர்களால் விளிக்கப்படும் மஞ்சள் புத்தகங்களைக் கூட, தவிர்த்து விட்டு சமூகவியலைப் பேசவியலாது என்கிற புரிதல் எமக்கு உண்டு. [தமிழ் மொழியில் எழுதப்பட்டு விற்பனை செய்யப்படுகிற கமர்ஷியல் போர்ணோவில் அய்யர் மாமிகள் திராவிட ஆணுறுப்புகள் மீது தீராக்காமம் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுவதன் பின்னிருக்கிற கூட்டு சமூக நனவிலி, அய்யர் மாமாக்கள் தமது மாமிகளை திருப்திப் படுத்த முடியாதவர்கள் என்று வருகிற myth, அப்புறம் குறியின் அளவு அதன் இயக்கம், நீடிக்கும் திறன் என்பன பற்றி உயர்வு நவிற்சியான வார்த்தைகள்- மறுபுறம் premature ejaculation, erectile dysfunction என்று பேப்பரில் வருகிற விளம்பரங்கள் - ஈதெல்லாம் தமிழ்நாட்டின் மானுடவியலாளர்களுக்கு கிடைத்திருக்கிற வரப்பிரசாதங்கள். முரண்வெளியில் போர்ணோ எழுத்துக்கள் பற்றிய விவாதம் நடக்கையில் இவற்றை அறிந்து கொள்க]
)(-)(
||எம்.ஐ.எம். றஊப் அவர்கள் முன்வைத்த கருத்தாக்கங்கள் தொடர்பானது. அதற்குரிய மறு பேச்சை அவரே நிகழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தவிர்;க்கலாமென்றாலும். இங்கு முஸ்லிம்கள் தொடர்பில் பயன்படுத்தப்படும் சில சொல்லாக்கங்களை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். பின்னர் அது எனது மறு பேச்சிற்கு அவசியமானது.
தேசியத்தை முன்வைக்கும் வரலாற்று நியாயம் உண்டென்றும் வலியுறுத்தல் தொடர்கிறது.
கிழக்கில் முஸ்லிம் தேசியவாத முனைப்புக்கள் எடுத்துக் கொண்டிருக்கும் வன்முறை நிலைப்பாடு மீண்டும்
மீண்டும் குருதிபடிந்த வரலாறுகளின் மீள் நிகழ்த்துகைக்கான முனைப்பாகவே தெரிகிறது.
ஏ.ஆர்.எம். இம்தியாஸின் கிழக்கு முஸ்லிம் தேசியவாத முனைப்புக்கள் தொடர்பான ஆய்வு மகிழ்ச்சியூட்டக்
கூடிய சித்திரத்தைக் கொண்டிருக்கவில்லை
நிலை நிறுத்தப்பட்ட அதிகார மையங்கள் இரண்டையும் (சிங்கள மற்றும் தமிழ்) மீறி …………
உள் முரண்பாடுகளும் தளைகளும் அதிகமுள்ள முஸ்லிம் சமூகத்தை …………..
உலகமயமாக்கல் சார்ந்த யோசனை நினைவடுக்கின் மீது முஸ்லிம் தேசியக் கனவுகள் ருதுவுறும் தென் கிழக்குப் பல்கலைக் கழகமும்………..
கூற்று 05 இல் உள்ள முஸ்லிம்கள் தொடர்பான சில அவதானங்களை மேலே தொகுத்துள்ளேன். இதை வாசிக்கின்ற எவரும் இலகுவாக அவதானிக்கக்கூடிய விடயமொன்றை நாம் கவனி;க்கலாம். அதாவது தமிழர் தேசத்தின் முஸ்லிம்கள் பற்றிய அபிப்பிராயங்கள் அல்லது நிலைப்பாடுகள் இங்கு துருத்திக் கொண்டு வெளிப்படுவதை காணலாம். கிழக்கில் முஸ்லிம் தேசம் வன்முறையை எடுத்துக் கொண்டது என்ற கூற்றுக்கும் நிலை நிறுத்தப்பட்ட அதிகார மையங்;கள் என்ற கூற்றுக்குமிடையேயுள்ள கேலித்தனத்தை நீங்கள் பார்க்க முடியும். நிலைநிறுத்தப்பட்ட அதிகார மையல்களுக்கு முன் முஸ்;லிம் தேசம் மேற்கொள்ள முடிவது வன்முறையாக இருக்குமா? நிலைநிறுத்தப்படாத அதிகாரமற்றதாக மையமாக இருக்குமொன்று தனது உரிமைக்கான கலகத்தைத்தான் செய்ய முடியும். முஸ்லிம் தேச முனைப்புக்கள் தமிழர் தேசத்துக்கு மகிழ்ச்சியூட்டுவதாய் இல்லை. எனவே அவர்களை மகிழ்ச்சியூட்டும் முனைப்புக்களை உடனடியாக முஸ்லிம் தேசம் கைக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி-ஏதோ இந்த உலகில் உள் முரண்பாடுகளும், தளைகளும் அதிகமுள்ளது. இலங்கை முஸ்லிம்களிடம்தான் என்ற கட்டமைப்பு எதற்காக? தமிழ் மற்றும் தமிழ் தேசத்துக்குள் உள்ள உள்-முரண்பாடுகளாலும் ,தளைகளாலும் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்ற உடல்கள் எத்தனை ஆயிரத்தை தாண்டிவிட்டது என்றாவது நினைத்துப் பாருங்கள். அந்த அளவிலிருந்து சிறு மசிரின் அளவு கூட முஸ்லிம் தேசத்துக்குள் உங்களால் காட்ட முடியுமா? ஏன் அப்படியான ஒரு கட்டமைப்பை முஸ்லிம்களின் மீது ஏற்றி வாசிக்க முற்படுகிறீர்கள்? என்ற கேள்வி நீங்கள் தமிழ் தேசத்து பழைய கனவின் புதிய தளிர்கள் என்றாகிறதல்லவா? உங்களுடைய வாசிப்பில் நெகிழ்ச்சித் தன்மையே இனிச் சாத்தியமில்லை என்றாகிவிட்டதா? ||
எமது கூற்றிலிருந்து குறித்த ஒரு வசனத்தை அது சொல்லப்பட்ட விதத்தில் இருந்து பிரித்தெடுத்து அர்த்தம் கற்பிப்பதை றியாஸ் குரானா நிகழ்த்தியிருக்கிறார். இது தான் பின் நவீன வாசிப்பு என்று அவர் எமக்கு பாடம் நடாத்தவும் கூடும். நாம் சொல்லியது இது: // அதுகுறித்த வரலாற்று நியாயம் முஸ்லிம்களிடம் உண்டெனவும் வலியுறுத்தல் தொடர்கிறது. தேசமென்பது நிழல்கோடுகளாலமைந்த அரூப புனைவேயொழிய பிறிதொன்றில்லை. இதழ் 2 பக்.23இல் மிஹாத் தனது நூலொன்றிலிருந்து மேற்கோளிடும் வரிகள் தேசியத்தைப் பற்றிய மிகச்சரியான வியாக்கியானமாகவே எனக்குப் படுகிறது. வரலாற்றில் இதுவரையான தேசியவாதங்களின் அவலமுடிவுகளை அறிந்தவரும், சிங்களத்தேசியவாதக் கொடுங்கனவினதும் தமிழ்த்தேசியவாதக் கனவினதும் பரிசோதனைக் கூடத்தில் வாழ்ந்து வருபவருமான றஊப் முஸ்லிம் தேசியவாதத்தை வரலாற்றின் வழி அணுக வேண்டாமென்கிறார்.// இந்தக் கூற்றில் தமிழர் தேசத்தின் நிலைப்பாடு எங்கிருக்கிறது? தமிழர் தேசத்தையும் இக்கூற்றின் வழி அணுகிப் பார்க்கக் கூடாது என்று சொன்னோமா? வரலாற்று நியாயங்களைக் காட்டிக் காட்டியே ஏலவே தம்மை நிறுவிக்கொண்ட தேசியவாதிகள் வரலாற்று நியாயங்களின் கணக்கைக் காட்டிப் புரிகிற அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு மறுப்பு அது… இதை அனுபவித்த நீங்களும் இப்படியாக தேசம் என்று இறுகுவது ஏன் என்ற ஆதங்கக் குரல் அது. இதை ஒரு தேசியவாதியால் புரிந்து கொள்ளவே முடியாது என்பதை றியாஸ் குரானா நிரூபித்துக் காட்டியிருக்கிறார். முஸ்லிம் தேச முனைப்புகள் பற்றி இம்தியாஸ் பொலிற்றி (Polity, SSA)சஞ்சிகையில் தெரிவித்திருந்த விடயங்கள் நியாயமானவை. பெருவெளி செயற்பாட்டாளர்கள் தேசக்கனவில் மிதந்து கொண்டு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுத்தால் நாமென்ன செய்ய? பெருவெளியினரைப் போல கோட்பாடுகளையும் கனவுகளையும் போட்டுக் குழப்புகிற ஆய்வல்ல இம்தியாஸினுடையது. மாறாக, கிழக்கின் நிலப்பகுதிகள், குட்டி முதலாளிகள், இரண்டு இராணுவக் கட்டமைப்புகள், தீவிரவாதத்தினுள்ளும் அடிப்படைவாதத்தினுள்ளும் செல்கிற முஸ்லிம் இளைஞர்கள் என யதார்த்தத்தை ஆராய்ந்த ஒன்று. அதனுள்ளிருந்து கொண்டு தனித்தேசம் என்ற கருத்து முன்வைக்கப்படுவதன் அறியாமையையே நாம் சொல்ல வேண்டியிருந்தது. தனித்தேசம் என்கிற ஒரு கோட்பாடா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள் கோட்பாட்டு ரீதியான இனத்தேசியமா என்று கூட தெளிவுபடுத்தப் படாத நிலையில் இவர்களது முனைப்பு தனித்தேசமொன்றுக்கானதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கூற்றுக்கள் அவை. உள்முரண்பாடுகளும் தளைகளும் முஸ்லிம்களுக்கிடையேதான் அதிகம் என்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இரண்டு கலாச்சாரங்களினதும் பிரதிகளைத் தனியே எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தோமென்றாற் கூட இலகுவில் புலப்படுகிற விடயம் இது. இங்கும் பாலியல் தொழிலாளிகளுக்கான மறுப்புகள், சமப்பாலுறவாளர்களுக்கான மறுப்புகள் எல்லாம் உண்டுதான், ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் போன்றில்லை. அப்படியான இறுகிய கட்டமைப்புகள் முழுதாக இல்லாவிடினும் பெருமளவுக்கு சிதைக்கப்பட்டாயிற்று.
)(-)(
||சமகாலத்தில் இலங்கையில் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியப் பிரதியாளர்களில் என் கணிப்பில் தேறுபவர்கள் மஜீதும், றியாஸ் குரானாவும்தான் என்று புகழ்;பாடி ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. புகழ்ச்சியில் மயங்கி அப்படியே பூரித்து உள்ளுக்குள்ளே புல்லரித்து கனவுகளில் மிதந்து திரிய சோலைக்கிளி, சேரன், ஜெயபாலன், நுஃமான் போன்ற இன்னும் பலரைப் போன்றவர்களல்ல நாம். சற்றுப் பொறுங்கள் இந்தப் புகழ்ச்சியின் மீது மூத்திரத்தை முடிந்தமட்டும் அடித்துவிட்டு வருகிறேன். அது முடிந்துவிட்டது. அதன் நாற்றமெடுக்கும் அருவருப்பு உங்கள் மூக்குகளில் இப்போது பரவும் என நினைக்கிறேன். இனித் தொடரலாம். என் கணிப்பின் படி என்ற ஒரு சிறு வார்த்தையே சமகாலத்து இலங்கையில் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பலரை அடித்து விரட்ட உதவுவதை கவனியுங்கள். ஏனையவர்களிடமிருந்து குறிப்பிடும் இருவரும் எப்படித் தேறுகிறார்கள் என்ற விரிவான வாசிப்புக்கூட நிகழ்த்தப்படவில்லை. ||
மூத்திரமடிப்பது என்பதை சாரு நிவேதிதா, முரண்வெளிக்காரர்கள் போன்ற சிலர் சனாதன பிம்பங்கள் மீது செய்து வந்திருக்கிறார்கள். இப்போது றியாஸ் குரானா என்கிற முஸ்லிம் சனாதனி தனது மூத்திரத்தை எங்கள் மீது அடிக்க முனைகிறார். எமக்கு அவரது குறியின் இலக்கில் இருந்து விலகுகிற வழிகள் தெரியும் என்பதை ஒரு தகவலாகச் சொல்லிக்கொண்டு மீதத்தைப் பார்ப்போம்:
சமகாலத்தில் வெளிவந்திருக்கிற கவிதைப்பிரதிகள்/கதைப்பிரதிகள் என எடுத்துக்கொண்டு பார்த்தால் அலறியின் இரண்டு தொகுப்புகள், பெண்ணியாவின் சினிமாப் பாடல் தொகுப்பு ஒன்று, பொத்துவில் பைசலின் தொகுப்பு, ராஷ்மியின் கவிதைத்தொகுப்பு: இவற்றுள் பைசலிடமிருந்து ஓரிரண்டு கவிதைகள், றாஷ்மியின் சில கவிதைகள் மட்டுமே கவிதையை உயிர்ப்புடன் நிகழ்த்திக் காட்டுபவை. (திரும்பவும் மதிப்பீடு என்று புலம்பாதீர்கள், மதிப்பீடு என்று பார்த்தால் மதிப்பீடு தான்: எங்கள் அளவு கோல்கள் எவை என்று கேளுங்கள், எதைப் புறமொதுக்குகிறோம் என்று கேளுங்கள்) றியாஸ் குரானாவின் பிரதிகள், மஜீதின் ‘சுள்ளிக்காடும் செம்பொடையனும்’ பிரதிகள் நமக்கு முன் நிகழ்த்தும் உயிர்ப்பான கவிதை இயக்கத்தை பிறரது பிரதிகள் நிகழ்த்துகின்றனவா? எவ்வளவு தூரம் போலி செய்யப்பட்டு திரும்ப திரும்ப படி எடுக்கப்படும் உணர்வை அவை தருகின்றன? இந்த சலிப்பே றியாஸினதும் மஜீதினதும் உயிர்ப்பு மிக்க பிரதியாக்கல் வினையின் பால் என்னை ஈர்த்தது. மஜீதின் பிரதிகளின் வெளிப்படுகிற துயரம், அன்பு, கொண்டாட்டம், எதிர்ப்பின் மூர்க்கம், காமம் இவையெல்லாவற்றையும் நான் வாசிக்க நேர்ந்த பிற ஈழப் பிரதிகளில் கண்டதில்லை. சிறுபான்மை இலக்கியமாகக் கொள்ளத்தக்க கருணாகரன் நிலாந்தன் போன்றவர்களிடம் நேசம், விடுதலைக்கான வேணவா, உயிர்ப்புமிக்க எதிர்ப்பு என்பன தென்பட்டாலும் நிலாந்தனின் தனிமனித வழிபாடும், வன்முறையை விமர்சனங்களற்றுப் பாடுதலும் அவர்களை ரசிப்பதை ஊறுபடுத்தி விடுகின்றன. இந்தப் புகழ்ச்சி மீது மூத்திரமடிப்பதன் மூலம் றியாஸ் குரானாவின் பெருந்தன்மை வெளிப்படுகிறதாய் யாராவது நினைத்தால், அவர்களுக்கு மூளையில்லை என்று அர்த்தம். எமது விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு இருக்கிற ஒரு தந்திரம் அது. சரி எமது புகழ்ச்சியின் மீது மூத்திரம். Ok! உங்களைப் புகழ்ந்து கடிதமெழுதிய இரா.சடாட்சரதேவி(குந்தவை), ஜீவகாருண்யன், மு.பொன்னம்பலம் போன்ற பெரிய திரு உரு மனிதர்களுக்கு…??? நிச்சயமாக மூத்திரமடிக்க மாட்டீர்கள் என்று தெரியும். நாங்கள் சிறு பொடியன்கள் -அவர்கள் திரு-உருக்கள்!! எங்கள் மீது மூத்திரமடிக்க எழும்புகிற குறி, அவர்களின் புகழ்ச்சிகள் முன் சுருண்டு தொங்குவது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்று தான். பெருவெளியில் அவர்களது கடிதத்தைப் பிரசுரித்து விட்டு பேசாமல் சுருண்டுதான் கிடந்தீர்கள் - இல்லையா? எங்கே போயின உங்கள் குறிகள்?
ஒரு சனாதனிக்கு மூத்திரம் அருவருப்பாக இருக்கும் என்ற அளவிலேயே அதைப் பிரயோகித்து சனாதனத்தை எதிர் கொள்வது வழக்கம். றியாஸ் குரானா சனாதன மறுப்பாளர்களான எம்மீதே அதைப் பிரயோகித்திருக்கிறது மாத்திரமன்றி மூத்திரத்தின் நெடி அருவருப்பானது என்று வேறு சொல்லித்தருகிறார். அவர் யார் என்பதை நீங்களே ஊகியுங்கள். மூத்திரம் உட்பட உடல்திரவங்களை அருவருப்பானதாகக் கருதுவது யாருடைய செயல்பாடு என்பதை ஆசான் அ.மார்க்ஸிடம் சென்று தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். உடல் திரவங்களிலே மூத்திரத்தின் தன்மை விசேடமானது. சாரு நிவேதிதாவின் பிரதிகளில் மூத்திரம் glorify செய்யப்படுகிற இடங்களைப் பட்டியலிட முடியும். முகத்தில் பெய்யப்படுகையில் இளஞ்சூடாக அந்த அனுபவம் அருமையாகவிருக்கும் என்று சொல்கிறான் பாற் பார்க்கரின் (Pat Barker) பிரதி நாயகன். றியாஸ் குரானாவைப் போல அதை அருவருப்பானதாகக் கருதும் மத்தியகால ஜென்மங்களுடன் என்னத்தைக் கதைக்கிறது?
‘என் கணிப்பின் படி என்ற ஒரு சிறு வார்த்தையே சமகாலத்து இலங்கையில் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பலரை அடித்து விரட்ட உதவுவதை கவனியுங்கள்’ என்று எழுதுகிற றியாஸ் குரானா மஜீதின் கவிதைகளுக்கான வாசிப்புப் பிரதியில் (’ஒரு இலையின் மரணம்’ பெருவெளி வெளியீடு P.05) சொல்கிறார்: ‘கவிதையின் பரப்பை சற்று விசாலப்படுத்தியவர்கள் மஜீதும் மிஹாதும் என்பது எனது அபிப்பிராயம்’ இங்கு வருகிற ‘எனது அபிப்பிராயம்’ என்கிற சொல் எழுதிக்கொண்டிருக்கிறவர்களில் மஜீத், மிஹாத் தவிர்ந்த ஏனையோரை விரட்டியடிப்பதாக நான் கருத முடியுமல்லவா - றியாஸ் குரானாவின் தருக்கத்தின் படி? எது எவ்வாறிருப்பினும் நான் அப்படிக் கருதவில்லையென்றே அறிவிக்கிறேன். இத்தகைய தரப்படுத்தல் தவிர்க்கவியலாத ஒன்றே. றியாஸ் குரானா தான் எதைச் செய்திருக்கிறார் என்பதை மறந்து விட்டு எம்மிடம் வந்து குற்றப்பத்திரிகை வாசிப்பதில் எனக்கு மிகவும் கடுப்பாகயிருக்கிறது.
)(-)(
||மஜீதின் கதையாண்டி என்ற நீள் பிரதியில் உருவாக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு அவர் இட்டிருக்கும் பெயர்கள் தொடர்பில் அமைகிறது. செம்பருத்தி எனும் பெண்ணின் பிரதி நடவடிக்கைகள் தமிழ்த் தேசப் பெண்ணின் நடவடிக்கையாக குறுக்கி வாசிக்கப்படுகிறது. அல்லது தமிழ்ப் பெண் என்று கூறி அவளையும் அவளது மரபையும் கேலி செய்கிறது என நம்பும் ஒருவருடைய வாசிப்பாக முன்கொண்டு செல்லப்படுகிறது. இதுபோலதான் யசோதரா என்ற பெண்ணும் கவனிக்கப்படுவதை அறியலாம். ||
மஜீதின் கதையாண்டியை ‘தமிழ் ஒடுக்குமுறைக்குள் வாழ்கிற முஸ்லிம் ஆண் மனதின் Erotic Fantasy’யாக வாசித்தோம். இதில் கதையாண்டி என்பதற்குப் பதில் ‘கதையாண்டியில் வருகிற பாலியல் சித்தரிப்புகள்’ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். அங்குதான் பிசகியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ‘கதை ஆண்டி’ பிரதியே Erotic Fantasy என்று முடிக்கிற தொனி எமது வாசிப்பில் இருந்திருக்கிறது. ஆனால், பாலியல்/உடலியல் விபரிப்புகள் அவ்வாறானவைதான் என்றே இப்போதும் கருதுகிறோம்.
பெயரில் என்ன இருக்கிறது என்று திருப்பி எங்களைக் கேட்டால் எட்வார்ட் செய்த் தொடங்கி என்றைய பின்-காலனிய வாசிப்புகளைக் கற்குமாறே கூறுவோம். ஏன் அல்பர் காம்யூவின் பிரதிகளில் அரேபியன்கள் மேகப்புண்களுடன் வந்தார்கள் என்பது தொடங்கி தற்போது எழுதுகிறவர்கள் வரை தென்படும் Xenephobiaவைக் கட்டுடைத்திருப்பது பற்றிக் கூடவா நீங்கள் அறிந்திருக்கவில்லை??
)(-)(
||நீங்கள் சொல்வதைப் போல காறித்துப்ப ஏதாவது இருக்குமென்று நான் கருதினால் இந்த மதிப்பீட்டு முறையின் மீதுதான் அதை நிறைவேற்றுவேன் ||
றியாஸ்! துப்பும் போது எனக்கு சொல்லிவிட்டுச் செய்யுங்கள், ஏனென்றால் ஒருமனிதர் தன்மீதே எப்படித் துப்பிக் கொள்ளுவார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது!!!
||மஜீதின் பிரதிகளில் கண்டுபிடிக்கப்படும் ஒருமை பன்மைப் பிரச்சினை. இலக்கணத்தில் கட்டளையின் பேரில்-இலக்கணத்தின் பணிப்புக்குட்பட்டதாகவே இலக்கிய மொழியமைப்புகள் நிறுவப்பட வேண்டும் என்ற ஒரு செய்தி. “நான் காகமாகிப் பறந்தேன்” இந்த வசனம் இலக்கண அடிப்படைகளை மீறுவதாக அமைவதில்லை. இதைக் கட்டுடைத்தோமானால் ~நான்| என்பது காகமானதின் பின்னரே அதன் ~வினை| மொழியாக முன்வைக்கப்படுகிறது. ||
வாத்யாரே, இந்த விசயம் கூடத் தெரியாமலா நாங்கள் இங்க கதைக்கிறம்? ‘நான் துண்டுகளாய்ச் சிதறினேன்’ எண்டதெல்லாம் கவிதையில் அனுமதிக்கப்படுற விஷயங்கள் தான். Poetic License என்பது மொழிக்குள் நீண்டகாலமாக புழக்கத்திலிருக்கிற ஒன்று தான். மொழிக்கு எதிரான செயற்பாடு அல்ல மஜீத் செய்து கொண்டிருப்பது. மொழி எப்போதும் மாற்றமுறுகிற ஒன்றாக, நிறுவனத்தன்மைகளற்றே இருக்கிறது - ஆகையால் மொழிக்கு எதிரான கலகம் கூட மொழிவழிப்பட்டதாகவே அமையும் என்பதால் மொழிக்கு எதிரான கலகம் சாத்தியமில்லை. உங்களைப் போன்ற வாத்தியார்கள் சொல்லுற சட்டங்களை வேணுமெண்டா மீறலாம். பிரதியில் மொழி என்னவாக இருக்கிறது எண்டு தெரியாமலா நாங்கள் கற்பகம் யசோதர பிரதிகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறம்? ‘இலக்கண இடறுகை என்பது அமைப்பாக்கப்பட்ட மொழி என்ற நிறுவனத்தின் மீது எதிர்ப் பேச்சு அவசியமில்லை என்ற கருத்தை நிறைவேற்றுதேயாகும்’ என்று றியாஸ் சொல்கிறார். எங்களுக்கு மொழியின் மீது காமம் இல்லை. கற்பகம் யசோதரவின் பிரதிகளில் எழுத்துப் பிழைகளை என்று மொழித்தூய்மைவாதிகள் கருதக்கூடியவற்றை நாங்கள் அப்படியே வலையேற்றியிருப்பதன் காரணங்கள் என்ன? கற்பகம் யசோதர அமைப்பாக்கப்பட்ட மொழியின் மீது தனது ஒப்பாரிகளை, முனகல்களைக் கொட்டுதலின் மூலம் கலகத்தை நிகழ்த்துகிறார். மஜீத் - அப்படியெதுவுமில்லை. கலகமுமில்லை, இலக்கண ரீதியான வாசிப்பில் இடறலேற்படுத்தாத மொழியுமில்லை. இரண்டுங்கெட்டான் தனம். கண்டு பிடிக்கப்பட்டவுடன் இப்படி defensiveஆக எதுவாவது சொல்ல வேண்டியேற்படுகிறது.
மேலும் நான் காகங்களாகிப் பறந்தேன் என்ற வரியின் மீது எந்த வாசிப்பையும் நாம் நிகழ்த்தவில்லை. மஜீதின் கதைப்பிரதியில் வருகிற ‘. 90களுக்குப் பின் ஒவ்வொரு முஸ்லிமுடைய கனவுகளிலும் இப்படித்தான் ஒரு மிகப் பருத்த கருங்காகமொன்று தனித்து அலைவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.’ என்ற வரியை கவனிப்புக்குட்படுத்தியிருந்தோம். இங்கு ‘ஒரு மிகப்பருத்த’ என்று சொல்லிவிட்டு திரும்ப ‘கருங்காகமொன்று’ என்று எழுதுவது கலகமா? அப்படியானால், dyslexia உள்ள மாணவர்கள் மொழி நிறுவனத்துக்கு எதிரான கலகக் காரர்களா? நாம் கவனிப்புக்குட்படுத்திய வரியை கலகம் தானென்று நிறுவிக்காட்டுங்கள் றியாஸ் குரானா. மண்டையில் மிளகாய் அரைக்க முனைகிற வேலையெல்லாம் எங்களிட்ட வேண்டாம்.
)(-)(
||றியாஸ்குரானா : முன் நவீனத்துவ ஆண்கடவுளின் பின் நவீன வருகை? என்று போல்ட் செய்யப்பட்ட சிறு தலைப்பின் கீழ் எதிர்வினையாக அமைந்திருப்பது ஏனென்று புரியவில்லை. ||
தலைப்பு உபதலைப்பு விடயத்தில் கூட குழப்பம் வருகிறதென்றால், றியாஸ் குரானா உங்களுக்காக நாங்கள் உண்மையிலேயே வருத்தப் படுகிறோம்.
)(-)(
||அத்தோடு வாசிப்பாளர்கள் முரண்படுகிற இடமாக பின்நவீன கவிதைப்பிரதியின் நான்காம் அத்தியாயமாகிய ‘தமது தேசத்தை வடிவமைக்கும் பயணிகளி;ன் நிலைப்பாடு’ என முன்மொழிகின்றனர். மேலோட்டமாக நோக்கினால் தமக்குள் கையகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசத்துக்கு முன்னிலையில், பிறிதொரு தேசமாக உருவாகி நின்றால் தோன்றும் மனநிலைதான் என்று அவதானிக்கலாம். தமிழ்த் தேசத்தைப் போல முஸ்லிம்களும் தமக்கான தேசக் கதையாடலை முன்வைப்பதில் இவர்களுக்கென்ன சிக்கலிருக்கிறது என அவர்களே சொல்வதைக் கேட்போம். தமிழர் தேசம் விளிம்பு நிலைக்குத்தள்ளப்பட்டு முஸ்லிம்கள் மையத்துக்கு வரும் முயற்சி என்று அறிவிக்கிறார்கள். ||
உங்களது தேசத்தை வடிவமைக்கிற நிலைப்பாட்டுடன் முரண்பட்டால் உடனே அது தமிழர் தேசக் குரல் என்பதாக முடிவு கட்டி விடுவதா? இப்படியாகச் சிந்திக்கும் பண்பு எந்த வகையினது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. தேசியவாதிகளின் அதே முத்திரை குத்தும் பண்பு தானே இது? தமிழர் தேசம் விளிம்பு நிலைக்கு செல்வதாக நாம் எங்கு அறிவித்தோம்? அப்படியாக முரண்வெளியிருந்து ஒரு வாக்கியத்தையாவது எடுத்துக் காட்டட்டும் மன்னிப்புக் கோருகிறோம். இவர்கள் தம்மை முஸ்லிம் தேசமாக நினைத்துக்கொண்டு Centrifugal X Centripetal ஏன்று நாம் கூறியிருப்பதை வாசித்தால் அப்படியாகத் தான் தென்படும். அது நவீனம்Xபின்நவீனம், உன்னதம்Xவிளிம்பு என்கிற பலவகையான எதிர்வுகளின் மையநோக்கு-மையநீக்க வினைகளின் பாற்பட்டது. முஸ்லிம் தேசம் தொடர்பானது அல்ல.
)(-)(
||றியாஸ்குரானாவின் ~கள்ளத்தோணி| தமிழர் தேசத்து பெருங்கனவை சிதைக்கும் ஒரு பிரதி என்றவகையில் அதற்கு முன்னே தோன்றி ஓலமிடுவதால் எதுவும் செய்துவிட முடியாது என்பதை இவர்கள் அறிவது மிக முக்கியமென்று நினைக்கிறேன். ||
கள்ளத்தோணி பிரதி ஒரு ஆண்மையப் பிரதியே. றியாஸ் குரானா சொல்வதைப் போல அது தமிழர் தேசப் பெருங்கனவை சிதைக்கிற பிரதி அல்ல. தமிழர் தேசப் பெருங்கனவை மிக உக்கிரத்துடன் விசாரணைக்குட்படுத்தும் பிரதிகளின் வரிசையில் முஸ்லிம்களுக்கு இன்னும் இடமில்லை. ஆத்மா, இளைய அப்துல்லா, ஓட்டமாவடி அறபாத், றியாஸ் குரானா, மிஹாத், மஜீத் என ஒருதொகைப் பிரதியாளர்களது பிரதிகளை வாசிப்புக்குட்படுத்திய பின்னரே இதைச் சொல்கிறேன். தமிழர் தேசியத்தை சிதைக்கும் பிரதிகளென ஷோபாசக்தியின் ‘தேசத்துரோகி’ ‘ம்’ ‘கொரில்லா’ போன்றவற்றையும் சுகனின் கவிதைகளையுமே சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ்த்தேசியக்கனவினை ஒரு கொடுங்கனவென வாசிக்கிற பிரதிகள் அவை மட்டுமே. றியாஸ் குரானாவின் குறியீடுகளும், இன்னபிற அலட்டல்களும் அவற்றின் உக்கிரத்தின் முன்னால் வெறும் தூசே. ஆக, தமிழ்த் தேசியவாதிகள் கூட ‘கள்ளத்தோணி’ பிரதியை அசுமாத்தமின்றிக் கடக்கமுடியும். இதற்கு முன் தோன்றி ஓலமிடுகிற தேவை தமிழ்த்தேசியர்களுக்கு இருப்பதாய் நான் நம்பவில்லை. எங்களுடைய அக்கறை தமிழர் தேசியக் கனவின் பாற்பட்டதாக இருந்திருந்தால் நாம் புகலிடத்து தமிழ்த்தேசியர்களுடன் இணைந்து ஷோபா சக்தி போன்ற மறுத்தோடிகளை எதிர்த்து உன்னதகாவியம் பாடிக் கொண்டிருந்திருக்கலாம். அப்படி செய்யாமல், ஷோபா சக்தி, பெருவெளி போன்ற மறுத்தோடிகளுடனான உரையாடலில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வது ஏன் என்கிற கேள்வியை கேட்டுப்பார்த்து விடை தேடவும்.
)(-)(
||அப்பிரதி சொல்கிறது-சிங்கள அரசு நிறுவனத்திற்கும் முஸ்லிம்களுக்குமே முதலில் முரண்பாடும் எதிர் இயக்கமும் ஆரம்பித்தது ||
அப்பிரதி உங்களுக்குச் சொல்கிறது - எங்களுக்கல்ல வாத்யாரே, பிரதியின் அர்த்தம் தொடர்பாகப் பாடமெடுத்த போது சொல்லின விசயங்கள் எங்கு பறந்தன? பிரதி சொல்லுதா? அப்படியா சேதி… இதை ஒரு பின் நவீன ஆள் சொல்லுறார்!!! பிரதி சொன்னா கேட்டுக் கொண்டு இருக்கிறதா? உங்களது குறியீடுகளுக்கு ஒரு அர்த்தம் தான் இருக்கு எண்டு ஆர் சொன்னது? பிரதி சொல்லிச்சா? இனி பிரதிக்கெதிரான கலகமும் பண்ணவேண்டுமா எண்டு நான் ஆச்சரியம் மிகப் பட்டேன். ஆசிரியனைக் கொல்ல வேண்டி வந்தது ஏன்? … அவன் எங்களுக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டு இருந்த படியால தானே அவனை சாகடிச்சம்? இப்ப றியாஸ் சொல்லுறார் - பிரதி அர்த்தம் சொல்லுது எண்டு. GRRRRRRRRR நாங்கள் சொல்லுவம் ‘பிரதியின் மரணம்’ ஆங்.. இங்கிலிசில.. ‘DEATH OF THE TEXT’ இது எங்கள் கடவுளான ரோலன் பார்த்துக்கு சமர்ப்பணம்.
)(-)(
||வரிவடிவத்தை கேலிசெய்யும் றியாஸ் குரானா வரிவடிவத்தை கையாளாமல் விட்டுவிடுவதே வடிவச்சிதைப்பின் சமிஞ்சையாய் வாசிக்க முடியாதா? ||
வரிவடிவத்தில் அமையாத கவிதை என்பது வடிவச் சிதைப்பா? அடக்கன்றாவிய, அப்ப பாரதியார் வடிவச் சிதைப்பை செய்திருந்தாரா?
வடிவத்தை சிதைத்தல் என்பதற்கு சிறந்த உதாரணம் : ஆர்.ராஜநாயகத்தின் ‘சில தொடக்கங்களும் சில முடிவுகளும்’ வெளியீடு காவ்யா. அல்லது ஹரியால் மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்ட கேத்தி ஆக்கரின் மின் நூலும் நல்ல உதாரணம். வாசித்துக் கண்டு கொள்க. இதைப்பாருங்கள், உங்களுக்கு இதையெல்லாம் விளங்கப்படுத்தி பாடமெடுக்க நாங்கள் கோட்பாட்டாளர்களோ சிந்தனையாளர்களோ கிடையாது. ஈதெல்லாத்துக்கும் வெளியில நிண்டு கொண்டு கல்லு+தக்காளி+கூமுட்டை எறியிற பெடியன்கள்+பெட்டைகள்+திருநங்கைகள்+மிருகங்கள்+உருப்படிகள். இப்படியான கோட்பாட்டு அலட்டல்களில் சிக்கி இன்டலக்சுவல் உப்புமாக் கிண்டுவதுடன் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இது வடிவச்சிதைப்பு அல்ல எண்டதுக்கு நாங்கள் முதல்லயே சொல்லீற்றம். பிறகென்ன வடிவச்சிதைப்பாய் கொள்ள முடியாதா எண்டு கொண்டு!!! Grrrr. டவுட் எண்டா உங்களுக்கு பின் நவீனம் படிப்பிச்ச சனங்களிடம் சென்று அறிந்து கொள்வீராக!
)(-)(
||அதே நேரம் ~உருவகக்கதை| என்ற ஒரு அறிவிப்பையும் தமது தேவவாக்காக முன்மொழிவதை அவதானிக்கலாம் ||
உருவகக் கதை என்று வகைப்படுத்துவதன் மூலம் உருவகக்கதை மீது எமக்கு வெறுப்பு என்றோ அதைத் தாழ்வாகக் கருதுகிறோம் என்றோ அர்த்தமில்லை. Pseudo-Intellectual Terroristஆக உள்ள றியாஸ் குரானாவின் பின் நவீன கவிதை என்ற அறிவிப்பு கிழக்கின் ஒருதொகைக் கவிகளிடையே ஒரு வகை அச்சத்தை உண்டு பண்ணியிருந்ததை அறிவோம். வரிவடிவத்தை எறியுங்கள் என்ற அவரது மிரட்டலும் இதுவும் சேர்ந்து பண்ணுகிற அராஜகத்தை எதிர்கொள்வதற்காக ‘இது ஒன்றும் புதிய விடயமில்லை ‘வெறுமனே’ நாங்கள் அறிந்த பழைய சரக்குத் தான்; புதியதும் பயமுறுத்துகிறதுமான ஒரு லேபிளை ஒட்டியிருக்கிறார்கள்’ என்பதை அறிவிக்க வேண்டியிருந்தது. இவரது இன்டலக்சுவல் ரெரரிசத்தை எதிர்கொள்ள அந்த மாதிரியான வாசிப்பை ஆயுதமாக்கினோம். பூதாகாரமான பலூன் பொம்மையைக் காட்டி வெருட்டுகையில் அதை ஊசியால் குத்தி வெடிக்கச் செய்து ‘it’s nothing’ என்று சொல்லுவதற்கொப்பான செயன்முறை அது.
சட்டாம்பியாகக் கதையாடுவது என்ற குற்றச்சாட்டிலும் இதையே நாம் சொல்ல விரும்புகிறோம். எமது சட்டாம்பிகளுக்கு முன் நாம் சட்டாம்பிகளாக enact செய்தாக வேண்டியிருக்கிறது. ‘இந்தப் பொடியள்’ என்கிற ஒரு எகிறலின் முலாம் பூசப்பட்ட வெளிப்பாடே றியாஸ் குரானாவினுடையது, என்பதை சொல்லுவத்ற்கு அதற்கு மேலான எகிறல் எமக்கு தேவைப்படுகிறது.
)(-)(
||கள்ளத்தோணி என்ற பின் நவீனக் கவிதைப்பிரதி சிறுவர்/சிறுமியர்களை விடுதலையின் பெயரால் அழித்தொழிக்க முனைந்து கொண்டிருப்பதை அக்கறையுள்ள ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டும். (விடுதலைக்காக சிறுவர் உடல்களை அழிப்பது தொடர்பில் நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள் தானே?) ||
றியாஸ் குரானா சுயவிமர்சனம் செய்பவராகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். என்னே அனாயாசமான பிம்பக் கட்டமைப்பு!!! றியாஸ் சிறுவர்கள் தொடர்பில் சொல்கிற மாதிரியான வாசிப்பு எமக்குத் தோன்றியது தான். ஆனால், தேசம் என்கிற சுமுகமான இருப்ப