May 1st, 2007
கூத்தாடிய வார்த்தைகள்
ஹெச்.ஜி.ரசூல்
எல்லா அடைபட்ட வாசல்களில் நின்றும்
வெவ்வேறு குரல் வர்ணனைகளால்
நெக்குருக கரைந்தழிந்து
ஒரு நெருப்புக் குருவியின் சிறகில்
என் உடலை இறக்கி வைத்தேன்
மரணம் குறித்த குறிப்புகளை
லவ்ஹுல் மஹ்பூழ் பலகையின்
பக்கங்களை புரட்டி தேடியெடுத்து
மீசான் கம்பின் நுனியில்
புனைந்து கொண்டபோது
சிறாத்தல் முஸ்தகீன் பாலம் அதிர்ந்தது.
வானமெங்கும் தோண்டிய குழிகளில்
அணில்களையும் குருவிகளையும்
அடக்கம் செய்துவிட்டு
தல்கீனை சொல்லியது நாக்கு.
கலிமாவைப் பற்றியும்
நாயனைப் பற்றியும்
தூதரைப் பற்றியும்
வார்த்தைகள் மிதமிஞ்சி
ஒன்றுகூடி கூத்தாடின
யார்யாரின் மரணம் பற்றியோ
பயந்திருந்த வார்த்தைகள் இப்போது
ரத்தம் கக்கிச் செத்தன.
முரண்வெளிக்கு
அன்பின் வாழ்த்துக்கள்
ஹெச்.ஜி.ரசூல்
தக்கலை,தென் இந்தியா.
9443172681
கவிதையா இது? முட்டாளின் உளரல்கள் போல் அல்லவா உள்ளது!
முட்டாள்களின் உளறல்கள் கவிதையாகக்கூடாதென்று எந்தக் கட்டாயமும் இல்லைத் தானே அன்பரே? ‘நெருப்பிக் குருவியின் சிறகில் உடலை இறக்கி வைப்ப’தான படிமங்கள் தரும் பரவசத்துக்காக இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.
/யார்யாரின் மரணம் பற்றியோ
பயந்திருந்த வார்த்தைகள் இப்போது
ரத்தம் கக்கிச் செத்தன./
ரசூலின் கவிதை தந்த முரண்வெளிக்கு நன்றி
ஆஹா.. அருமையாயிருக்கே. அந்த அரபி வார்த்தைகளுக்கு அப்படியே பின் குறிப்பாக தமிழ் அர்த்தமும் கொடுத்தால் நன்றாக இருக்குமே.
ஒரு அடக்கஸ்தலத்தில் கண்ட வாசகங்கள் ஏனோ தெரியாமல் நினைவுக்கு வருகின்றது. உங்களுக்காக பிறர் தொழுகும் முன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.
மரணத்தைப் பற்றி இப்படி நச்சென்று கூறும் வாசகம் வேறு இருக்க முடியாது. இஸ்லாம் ஒன்றே முடிவை நோக்கி ஆரம்பம் செய்கின்ற வணக்க வழிபாட்டைக் கொண்டிருக்கிறது.